Published : 13 Jun 2023 01:01 PM
Last Updated : 13 Jun 2023 01:01 PM

விஜய் ஆண்டனியின் ‘தமிழரசன்’ ஜூன் 16-ல் ஓடிடியில் ரிலீஸ்

விஜய் ஆண்டனி நடித்துள்ள ‘தமிழரசன்’ திரைப்படம் ஜூன் 16-ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘தமிழரசன்’. ரம்யா நம்பீசன், பிரணவ் மோகன், சுரேஷ் கோபி, சோனு சூட், யோகிபாபு பாண்டியராஜன், கஸ்தூரி, முனிஷ்காந்த், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருந்தனர். படத்துக்கு இளையராஜா இசையமைத்திருந்தார். ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் உருவான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில் இப்படம் வரும் ஜூன் 16-ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நடிகர் விஜய் ஆண்டனி பேசுகையில், “இயக்குநரின் கருத்துரு அளித்த நம்பிக்கை என்னை இப்படத்தில் இணைத்தது. அச்சத்தை ஏற்படுத்தும் சமூகத்தைக் கிட்டத்தட்ட பிரதிபலிக்கும் காட்சிகளை இப்படத்தில் இணைத்துள்ளார். திரையரங்குகளில் வெளியானாலும், இந்தப் படத்தைப் பார்க்காதவர்கள் ஜீ5 ஓடிடி தளத்தில் காணலாம்” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x