‘ப்ரேக்கிங் பேட்’ வெப் சீரிஸ் புகழ் நடிகர் மைக் படாயே காலமானார்

‘ப்ரேக்கிங் பேட்’ வெப் சீரிஸ் புகழ் நடிகர் மைக் படாயே காலமானார்
Updated on
1 min read

‘ப்ரேக்கிங் பேட்’ வெப் சீரிஸ் மூலம் கவனம் பெற்ற நடிகர் மைக் படாயே (Mike Batayeh) மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 52.

நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணக்கிடைக்கும் ‘ப்ரேக்கிங் பேட்’ இணையத் தொடருக்கு உலகம் முழுக்க ரசிகர்கள் உள்ளனர். கிட்டதட்ட 62 எபிசோட்களைக் கொண்ட இந்த தொடரை வின்ஸ் கில்லிகன் இயக்கியிருந்தார். இந்தத் தொடரில் மேனேஜராக டென்னிஸ் மார்கோவ்ஸ்கி என்னும் கேரக்டரில் அவர் நடித்திருந்தார்.

காமெடி நடிகராக புகழ்பெற்ற இவர், ‘எவரிபடி லவ்ஸ் ரேமன்’ (Everybody Loves Raymond), ‘தி ஷீல்டு’ (The Shield), ‘ஸ்லீப்பர் செல்’ (Sleeper Cell) உள்ளிட்ட பல்வேறு தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். 52 வயதான மைக் படாயே தனது மிச்சிகன் வீட்டில் வசித்து வந்தார். அவர் தூக்கத்தில் ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக மைக்கின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in