

இந்த வாரம் திரையரங்குகள், ஓடிடி மற்றும் திரையரங்குகளுக்குப் பிறகு ஓடிடியில் ரிலீஸாகும் படங்கள் குறித்து பார்ப்போம்.
தியேட்டர் ரிலீஸ்: அசோக் செல்வன், சரத்குமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘போர் தொழில்’ திரைப்படம் நாளை (ஜூன் 9) திரையரங்குகளில் வெளியாகிறது. கார்த்திக் கிரிஷ் இயக்கத்தில் சித்தார்த் நடித்துள்ள ‘டக்கர்’ மற்றும் சமுத்திரகனி நடித்துள்ள ‘விமானம்’ திரைப்படத்தையும் நாளை திரையரங்குகளில் காணலாம்.
குரு சோமசுந்தரம் நடித்துள்ள ‘பெல்’ திரைப்படம் நாளை வெளியாகிறது. ஆண்டனி ராமஸ் நடித்துள்ள ‘ட்ரான்ஸ்ஃபார்மர்ஸ்: ரைஸ் ஆஃப் தி பீஸ்ட்’ (Transformers: Rise of the Beasts) ஹாலிவுட் திரைப்படம் தற்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
நேரடி ஓடிடி ரிலீஸ்: வினித்ரா மேனன் நடித்துள்ள ‘மாலை நேர மல்லிப்பூ’ படம் ஆஹா ஓடிடியில் நாளை வெளியாகிறது. ஷாயித் கபூர் நடித்துள்ள ‘ப்ளடி டாடி’ (Bloody Daddy) திரைப்படத்தை ஜியோ சினிமாவில் நாளை காணலாம்.
திரையரங்குகளுக்கு பிறகான ஓடிடி ரிலீஸ்: ஜேம்ஸ் கேமரூன் இயக்கியுள்ள ‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ திரைப்படம் ஹாட் ஸ்டார் ஓடிடியில் தற்போது காணக் கிடைக்கிறது. வெங்கட்பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடித்துள்ள ‘கஸ்டடி’ திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் நாளை வெளியாகிறது. டோவினோ தாமஸின் ‘2018’ திரைப்படத்தை சோனி லிவ் ஓடிடி தளத்தில் இப்போது காணலாம்.