

மும்பை: நடிகை தமன்னா நடித்துள்ள வெப் தொடர், ‘ஜீ கர்தா’ (Jee Karda). அருணிமா சர்மா இயக்கியுள்ள இந்தத் தொடரை மடோக் பிலிம்ஸ் சார்பில் தினேஷ் விஜன் தயாரித்துள்ளார். இதில் ஆஷிம் குலாடி, சுஹைல் நய்யார், அன்யா சிங், ஹுசைன் தலால் உட்பட பலர் நடித்துள்ளனர். 8 எபிசோடுகளை கொண்ட இந்த தொடர், அமேசான் பிரைம் வீடியோவில் வரும் 15-ம் தேதி வெளியாகிறது. ஏழு, குழந்தை பருவ நண்பர்களின் கதை. 30 வயதில் தாங்கள் கற்பனை செய்தது போல வாழ்க்கை அமையவில்லை என்பதை உணர்கிறார்கள். பிறகு என்ன நடக்கிறது என்பது கதை.