Published : 19 Mar 2023 11:51 AM
Last Updated : 19 Mar 2023 11:51 AM

மார்ச் 24-ல் ஓடிடியில் வெளியாகிறது மோகன்.ஜியின் ‘பகாசூரன்’

மோகன்.ஜி இயக்கத்தில் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் ‘பகாசூரன்’ திரைப்படம் மார்ச் 24-ம் தேதி ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

‘பழைய வண்ணாரப்பேட்டை’, ‘திரௌபதி’, ‘ருத்ர தாண்டவம்’ படங்களைத் தொடர்ந்து இயக்குநர் மோகன்.ஜி இயக்கியுள்ள படம் ‘பகாசூரன்’. கடந்த பிப்ரவரி 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படத்தில் செல்வராகவன், நட்டி நட்ராஜ் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்திருந்தார். திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

இந்நிலையில் படம் வரும் மார்ச் 24-ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் ‘பகாசூரன்’ படத்தின் வெற்றிக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ரூ.5 லட்சம் மதிப்புள்ள வாட்சை தயாரிப்பாளர் கௌதம், இயக்குநர் மோகன்.ஜி-க்கு பரிசாக வழங்கியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x