‘அவதார் 2’ முதல் ‘டாக்டர் ஜி’ வரை - தியேட்டர், ஓடிடியில் இந்த வாரம் என்ன பார்க்கலாம்?

‘அவதார் 2’ முதல் ‘டாக்டர் ஜி’ வரை - தியேட்டர், ஓடிடியில் இந்த வாரம் என்ன பார்க்கலாம்?

Published on

இந்த வாரம் ஓடிடி மற்றும் திரையரங்குகளில் என்னென்ன புதுப் படங்கள் வெளியாகின்றன என்பது குறித்து ஒரு விரைவு முன்னோட்டத்தைப் பார்ப்போம். திரைப்படங்கள் மட்டுமல்லாமல், எந்தெந்த வெப் சீரிஸ்கள் வெளியாகின்றன என்பதையும் அறிவோம்.

தியேட்டர் ரிலீஸ்: ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் சாம் வொர்திங்டன் நடிப்பில் உருவாகியுள்ள ‘அவதார் தி வே ஆஃப் வாட்டர்’ திரைப்படம் நாளை (டிசம்பர் 16ம் தேதி) திரையரங்குகளில் வெளியாகிறது.

நேரடி ஓடிடி ரிலீஸ்: மகேஷ் நாராயணன் இயக்கத்தில் குஞ்சாகாபோபன் நடிப்பில் உருவாகியுள்ள ‘அறிவிப்பு’ (Ariyippu) திரைப்படம் நேரடியாக நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் டிசம்பர் 16-ல் வெளியாகிறது.

விக்கி கவுசல், கீரா அத்வானி இயக்கத்தில் உருவான ‘கோவிந்தா நாம் மேரா’ இந்தி திரைப்படம் ஹாட்ஸ்டாரில் நாளை (டிச16) வெளியிடப்பட உள்ளது.

திரையரங்குகளுக்கு பிறகான ஓடிடி ரிலீஸ்: ஆயுஷ்மான் குர்ரானா நடித்துள்ள ‘டாக்டர் ஜி’ இந்தி திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் தற்போது காணக்கிடைக்கிறது. அதேபோல, உதயநிதி ஸ்டாலினின் ‘கலகத்தலைவன்’ நெட்ஃபிளிக்ஸில் நாளை வெளியாகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in