

மிர்ச்சி செந்தில், ஜெயசீலன் தங்கவேல் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள வெப்தொடர் ‘போலீஸ் போலீஸ்'. சுஜிதா தனுஷ், ஷபானா ஷாஜகான், சத்யா, வின்சென்ட் ராய் உள்பட பலர் நடித்துள்ளனர். ஆக்ஷன், நகைச்சுவை மற்றும் ரொமான்ஸுடன் கூடிய இந்த தொடர் ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் செப்.19-ல் வெளியாக இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் புதிய புரமோ வீடியோ வரவேற்பைப் பெற்றுள்ளது.