

சினிமா ஃபேக்டரி அகாடமியில் படித்து வரும் மாணவர்கள் இணைந்து ‘குருதி மலை’ என்ற வெப் தொடரை இயக்குகின்றனர். 7 அத்தியாயங்களைக் கொண்ட இந்த வெப் தொடரில், இயக்கம், ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, விஎப்எக்ஸ், மெய்நிகர் தயாரிப்பு, நடிப்பு உள்ளிட்ட அனைத்து பணிகளையும் மாணவர்களே மேற்கொள்கிறார்கள்.
இத்தொடரில், அகாடமியின் திறமையான மாணவர்கள் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். தேசிய நாடகப் பள்ளியைச் சேர்ந்த சந்திரமோகனும், நடிகர் நாசரும் மாணவர்களுக்குப் பயிற்சி அளித்து வருகின்றனர். படிப்பு நடக்கும்போதே ஒரு முழுமையான வலைத்தொடரை உருவாக்கும் இந்த முயற்சி, இந்தியாவில் இதுதான் முதன்முறை.
ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கியின் ‘வெண்ணிற இரவுகள்’ குறுநாவலை த்ரில்லர் பாணியில் சொல்லும் கதையைக் கொண்டது இந்த வெப் தொடர் ஆகஸ்ட் மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்குகிறது. சினிமா ஃபேக்டரி அகாடமியின் நிறுவனர் ராஜேஷ் ரவீந்திரன் தயாரிக்கிறார்.