

இந்த வாரம் திரையரங்குகள், ஓடிடி மற்றும் திரையரங்குகளுக்குப் பிறகு ஓடிடியில் ரிலீஸாகும் படங்கள் குறித்து பார்ப்போம்.
தியேட்டர் ரிலீஸ்: சுந்தர்.சி இயக்கி நடிக்கும் ‘அரண்மனை 4’, கமலக்கண்ணனின் ‘குரங்கு பெடல்’, எம்.எஸ்.பாஸ்கரின் ‘அக்கரன்’, டான்ஸ் மாஸ்டர் தினேஷின் ‘நின்னு விளையாடு’, ‘சபரி’ ஆகிய திரைப்படங்கள் வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாகின்றன.
நிவின் பாலியின் ‘மலையாளி ஃப்ரம் இந்தியா’ தற்போது காணக்கிடைக்கிறது. டோவினோ தாமஸின் ‘நடிகர்’ ஆகிய மலையாளம் நாளை வெளியாகிறது. ‘பிரசன்ன வதனம்’, அல்லாரி நரேஷின் ‘ஆக ஒக்கடி அடக்கு’ (Aa Okkati Adakku) ஆகிய தெலுங்கு படங்களை நாளை காண முடியும். ரியான் கோஸ்லிங்கின் ‘தி ஃபால் காய்’ ஹாலிவுட் படமும் நாளை திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது.
நேரடி ஓடிடி ரிலீஸ்: அன்னி ஹாத்வேவின் ‘தி ஐடியா ஆஃப் யூ’ ஹாலிவுட் படத்தை அமேசான் ப்ரைம் ஓடிடியில் தற்போது வெளியிடப்பட்டு காணக்கிடைக்கிறது.
திரையரங்குகளுக்கு பிறகான ஓடிடி ரிலீஸ்: ஜி.வி.பிரகாஷின் ‘டீயர்’ படத்தை நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் காண முடியும். அஜய் தேவ்கன் மாதவன், ஜோதிகாவின் ‘சைத்தான்’ இந்தி படத்தை நெட்ஃப்ளிக்ஸில் வெள்ளிக்கிழமை காண முடியும். தீபக் சரோஜின் ‘சித்தார்த் ராய்’, யஷ் பூரியின் ‘ஹாப்பி என்டிங்’ ஆகிய தெலுங்கு படங்களை ஆஹா ஓடிடியில் நாளை காண முடியும்.
இணைய தொடர்: சஞ்சய் லீலா பன்சாலியின் ‘ஹீராமண்டி’ இந்தி இணையத் தொடர் தற்போது நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் காணக்கிடைக்கிறது.