Published : 08 Jan 2024 08:40 PM
Last Updated : 08 Jan 2024 08:40 PM

ஐஎம்டிபி தளத்தில் அதிக ரேட்டிங் கொண்ட இந்தியப் படங்களில் ‘12th Fail’ முதலிடம்

மும்பை: பார்வையாளர்களின் வரவேற்பையடுத்து இந்திய சினிமாவில் அதிகபட்ச ரேட்டிங் கொண்ட படம் என்ற சாதனையை படைத்துள்ளது ‘12th fail’ திரைப்படம். 9.2 என்ற ஐஎம்டிபி ரேட்டிங்குடன் முன்னிலையில் உள்ளது. இது 2023-ம் ஆண்டில் வெளியான ஹாலிவுட் படங்களான கிறிஸ்டோபர் நோலனின் ஓப்பன்ஹைமர் (8.4 ரேட்டிங்), மார்ட்டின் ஸ்கார்செஸியின் ‘கில்லர்ஸ் ஆஃப் தி ஃப்ளவர் மூன்’ (7.8 ரேட்டிங்) படங்களின் ரேட்டிங்கை விட அதிகம்.

இந்த தரவரிசையில் இரண்டாம் இடத்தில் ‘Ramayana: The Legend of Prince Rama’ என்ற அனிமேஷன் படம் இடம்பிடித்துள்ளது. மூன்றாவது இடத்தில் மணிரத்னம் - கமல்ஹாசனின் ‘நாயகன்’ படமும், ஹிருஷிகேஷ் முகர்ஜியின் ‘கோல்மால்’, மாதவனின் ‘ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட், கமலின் ‘அன்பே சிவம்’, கன்னட படமான ‘777 சார்லி’, மாரி செல்வராஜின் ‘பரியேறும் பெருமாள்’, மோகன்லாலின் ‘மணிச்சித்ரதாலு’, இந்திரன்ஸ் நடித்த ‘ஹோம்’ ஆகிய படங்கள் முதல் 10 இடங்களைப் பெற்றுள்ளன.

12th Fail: விது வினோத் சோப்ரா இயக்கத்தில் விக்ராந்த் மாஸ்ஸி நடித்துள்ள பாலிவுட் படமான ‘12th fail’ கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 27-ம் தேதி வெளியானது. சாந்தனு மொய்த்ரா இசையமைத்துள்ள இப்படத்தை விது வினோத் சோப்ராவே தயாரித்துள்ளார். ரூ.20 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இப்படம் ரூ.70 கோடி வரை வசூலித்தது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வரவேற்பை பெற்றுள்ள இப்படம் திரையரங்குக்கு பிறகான ஓடிடி வெளியீட்டில் அதிக கவனம் பெற்று வருகிறது. படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் காணக்கிடைக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x