முத்தையா முரளிதரனின் பயோபிக் படமான ‘800’ ஓடிடியில் டிச.2-ல் ரிலீஸ்

முத்தையா முரளிதரனின் பயோபிக் படமான ‘800’ ஓடிடியில் டிச.2-ல் ரிலீஸ்

Published on

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள ‘800’ திரைப்படம் வரும் டிசம்பர் 2-ம் தேதி ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடக்கத்தில் இப்படத்தில் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக அறிவிக்கப்பட்டு, அதற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களும் வெளியிடப்பட்டன. ஆனால், சர்ச்சையால் அவர் படத்திலிருந்து விலகினார். இதனையடுத்து, ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படப் புகழ் நடிகர் மதுர் மிட்டல், முத்தையா முரளிதரனாகவும், மதிமலராக மஹிமா நம்பியாரும் நடித்துள்ளனர்.

இயக்குநர் வெங்கட்பிரபுவிடம் அசோசியேட் இயக்குநராக இருந்தவரும், ‘கனிமொழி’ (2010) படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவருமான ஸ்ரீபதி இப்படத்தை இயக்கியுள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்துக்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு கடந்த அக்டோபர் 6-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில், இப்படம் வரும் டிசம்பர் 2-ம் தேதி ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் காண முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in