உருவாகிறது ‘காலா பாணி’ சீசன் 2 - நெட்ஃப்ளிக்ஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு

உருவாகிறது ‘காலா பாணி’ சீசன் 2 - நெட்ஃப்ளிக்ஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு
Updated on
1 min read

மும்பை: நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் அண்மையில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற ‘காலா பாணி’ தொடரின் இரண்டாம் சீசன் உருவாக உள்ளதாக நெட்ஃப்ளிக்ஸ் அறிவித்துள்ளது.

சமீர் சக்சேனா, அமீர் கொலானி இயக்கத்தில் உருவான வெப்தொடர் ‘காலா பாணி’. கடந்த அக்.18ஆம் தேதி வெளியான இத்தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் மோனா சிங், அஷுடோஷ் கோவாரிகர், அமே வாக், சுகாந்த் கோயல் ஆகியோர் நடித்திருந்தனர். அந்தமான் தீவில் நடைபெறும் கதைக்களத்தைக் கொண்ட இத்தொடரின் நேர்த்தியான திரைக்கதை பலராலும் பாராட்டப்பட்டது. நெட்ஃப்ளிக்ஸ் ட்ரெண்டிங் பட்டியலிலும் இத்தொடர்ந்து தொடர்ந்து நீடித்து வந்தது.

இந்த நிலையில், இத்தொடரின் இரண்டாம் சீசன் விரைவில் உருவாக உள்ளதாக நெட்ஃப்ளிக்ஸ் தளம் தனது எக்ஸ் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. முதல் சீசனின் முடிவில், இரண்டாம் சீசனுக்கான குறியீடுகள் தெளிவாக இல்லாததால், இது தொடர்பாக ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்த நிலையில், இதன் இரண்டாவது சீசன் உருவாக உள்ளதை நெட்ஃப்ளிக்ஸ் உறுதி செய்துள்ளது.

ஏழு எபிசோட்களைக் கொண்ட ‘காலா பாணி’ தொடர் ராட்டன் டொமேட்டோஸ் தளத்தில் 86% ரேட்டிங் பெற்றுள்ளது. ஐம்டிபி தளத்தில் 8 ரேட்டிங் பெற்றுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in