ஜூன் 16-ல் ஓடிடியில் ‘இராவண கோட்டம்’ ரிலீஸ்

ஜூன் 16-ல் ஓடிடியில் ‘இராவண கோட்டம்’ ரிலீஸ்
Updated on
1 min read

சாந்தனு நடித்துள்ள ‘இராவண கோட்டம்’ திரைப்படம் வரும் ஜூன் 16-ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

‘மதயானைக் கூட்டம்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென தனி முத்திரை பதித்த இயக்குநர் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் உருவான படம் ‘இராவண கோட்டம்’. சாந்தனு நாயகனாக நடித்திருந்த இப்படத்தில் ‘கயல்’ ஆனந்தி நாயகியாக நடித்திருந்தார். தவிர, பிரபு, இளவரசு, தீபா சங்கர், அருள்தாஸ் உள்ளிட்ட நடித்திருந்த இப்படத்திற்கு ஜஸ்டின் பிராபகர் இசையமைத்திருந்தார். படத்தை கண்ணன் ரவி தயாரித்திருந்தார். தென்மாவட்டங்களில் நிலவும் சாதிய அரசியலையும், கருவேல மரத்தினால் ஏற்படும் பாதிப்புகளையும் பேசிய இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ஒரு மாதத்தை கடக்க உள்ள நிலையில், வரும் ஜூன் 16-ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. | விமர்சனத்தை வாசிக்க: இராவண கோட்டம்: திரை விமர்சனம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in