Published : 16 Sep 2017 12:23 PM
Last Updated : 16 Sep 2017 12:23 PM

சிறப்பாகச் செய்கிறது இந்து! - சுபகுணராஜன்

‘தி இந்து’ தமிழ் நாளிதழ் இன்று ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. வாசகர்களின் ஊக்கத்தாலும், பங்களிப்பாலும் மாற்றங்களுக்குத் தயாராகி வருகிறது. இந்த சூழலில் வாசகர்கள் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கத்துடன் தி இந்து தமிழ் நாளிதழ் குறித்து தமிழகத்தின் மிக முக்கியமான முன்னோடிகள், எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்திருக்கிறார்கள்.

சுபகுணராஜன், ‘காட்சிப்பிழை திரை’ இதழின் ஆசிரியர்.

ஏறத்தாழ நாற்பதுக்கும் மேலான ஆண்டு காலமாக ‘தி இந்து’ (ஆங்கிலம்) நாளிதழின் வாசகன் நான். அந்தக் குழுமத்தின் தமிழ் நாளிதழ் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது. அதைச் சிறப்பாகச் செய்துவருகிறது ‘தி இந்து’.

கட்டுரைப் பகுதிகள், தமிழ் நாளிதழ்கள் எனும் தளத்தில் பாய்ச்சலான மாற்றங்களைச் செய்தது. பல்தள கருத்தியலாளர்களின் கட்டுரைகளைப் பெற்றுப் பதிவிட்டு, நடப்புகள் குறித்த பார்வையைச் செழுமைப்படுத்திச் சிறப்பு செய்தது வரவேற்புக்குரியது. ஆங்கில நாளிதழ் மொழிபெயர்ப்புக் கட்டுரைகள், தமிழில் மட்டுமே வாசிப்பவர்க்குச் சிறந்த அறிமுகங்கள். சொற்கள், அவற்றின் வாக்கிய அமைப்பின் ‘வினைகள்’ குறித்து எழுதிய பதிவுகள் பயனுள்ளவை.

‘அரசத்துவம்’ குறித்த கட்டுரை இன்றைய ஆட்சியாளர் குறித்த அறிதலுக்கு இன்றியமையாத ஒன்று. இவை போன்ற பார்வை விரிவுகள் தமிழ் நாளிதழ் தளத்தின் பார்வை வெளியே விரிக்கும். இது காலத்தின் தேவை!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x