Published : 16 Sep 2017 12:06 PM
Last Updated : 16 Sep 2017 12:06 PM

‘தி இந்து’ தமிழ் நாளிதழ் நிதானமும் ஆழமும்! - சு.வெங்கடேசன்,

‘தி இந்து’ தமிழ் நாளிதழ் இன்று ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. வாசகர்களின் ஊக்கத்தாலும், பங்களிப்பாலும் மாற்றங்களுக்குத் தயாராகி வருகிறது. இந்த சூழலில் வாசகர்கள் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கத்துடன் தி இந்து தமிழ் நாளிதழ் குறித்து தமிழகத்தின் மிக முக்கியமான முன்னோடிகள், எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்திருக்கிறார்கள்.

சு.வெங்கடேசன், எழுத்தாளர்.

காட்சி ஊடகங்களின் பெருங்கூச்சல்களுக்கு இடையே நிதானமும் ஆழமும் மிக்க வாசிப்புத்தளம் மாய்ந்துவிடவில்லை என்பதன் அடையாளமாக ‘தி இந்து’ திகழ்கிறது. சமூக வலைதளங்களும் மின்னணு ஊடகங்களும் கணந்தோறும் பாய்ந்து சென்றுகொண்டிருக்கிற இந்தக் காலத்தில், இனி ஒருபோதும் நாளிதழ்களால் செய்திகளை முந்தித்தர முடியாது. செய்திகளின் அரசியலைப் பேசுவதன் மூலம் மட்டுமே தமக்கான அடையாளத்தை அவை தக்கவைத்துக்கொள்ள முடியும். அதனை ‘தி இந்து’ உணர்ந்து செயல்படுவதாகவே நினைக்கிறேன். மொழிபெயர்ப்புக் கட்டுரைகளின் அரசியல் ஆழத்துக்கும் தமிழில் எழுதப்படும் கட்டுரைகளின் அரசியல் ஆழத்துக்கும் நடுவில் இடைவெளி உள்ளது. பசுப் பாதுகாவலர்கள் என்ற பெயரில் கலவரங்களில் ஈடுபடுவோரை ‘பசு குண்டர்கள்’ என்றே இனி அழைப்போம் என தலையங்கத்தில் எழுதும் ஒரு நாளிதழ் இன்றைய அரசியல் சூழலில் எவ்வளவு முக்கியம் வாய்ந்தது என்பதைத் தமிழக வாசகர்கள் நன்கு அறிவார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x