Published : 07 Jul 2014 12:00 AM
Last Updated : 07 Jul 2014 12:00 AM

இயற்கையை காக்க இணைந்த இளைஞர்கள்- நாட்டு நலப் பணியில் நாணல் நண்பர்கள் குழு

‘கடும் காற்றடித்தாலும் புயல் வெள்ளமானாலும் நாணல் அசை யாமல் நிற்கும். அதனால்தான் எங்கள் அமைப்புக்கு ‘நாணல் நண்பர்கள் குழு’ என்ற பெயரைத் தேர்வு செய்தோம்’’ என்கிறார் தமிழ்தாசன். மதுரை மாவட்டத்தில் சுற்றுச்சூழல் மற்றும் வரலாறு சார்ந்த பிரச்சினைகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற் படுத்திக் கொண்டிருக்கிறது நாணல் குழு.

இந்தக் குழுவில் முப்பது இளைஞர் கள் இருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலோர் பட்டம் படித்துவிட்டு பல்வேறு துறைகளில் பணி செய்ப வர்கள். இயற்கையை காக்க ஒரு குடையின் கீழ் ஒன்றுகூடி இருக் கிறார்கள். தங்களது சேவை குறித்து நம்மிடம் பேசினார் குழுவில் நீர் மற்றும் நீர்நிலைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பணியில் ஈடுபட்டிருக்கும் தமிழ்தாசன்.

கண்மாய்கள் உள்ளிட்ட நீர்நிலை கள், பல்லுயிர்க்கான பொதுவுடமை சொத்து. நீர்நிலைகளைச் சுற்றி மரங்கள் வளர்கின்றன. நீர்நிலைகளைத் தேடி பறவைகள் வருகின்றன. கண்மாய் களை அழித்தால் இவை அனைத்துக் குமே கேடு. ஆனால், மதுரையில் நாற்பதுக்கும் மேற்பட்ட கண்மாய் களை அரசே அழித்துவிட்டது என்பது தான் கொடுமையான விஷயம்.

உலகனேரி கண்மாயில்தான் உயர் நீதிமன்றக் கிளையை கட்டியுள்ளனர். சம்பைக்குளத்தில் மதுரை எஸ்.பி. அலுவலகத்தையும் மதிச்சியம் கண்மாயில் பால் பண்ணையையும் மானகிரி கண்மாயில் வக்ஃபு கல்லூரி யையும் தல்லாகுளத்தில் மாநகராட்சி கட்டிடத்தையும் வண்டியூர் கண் மாயில் மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தையும் கட்டிவிட்டார்கள்.

இந்த நீர்நிலைகள் அனைத்துமே கி.பி. 100-ம் ஆண்டுக்கு முன்னதாக வடிவமைக்கப்பட்டதாக வரலாறு சொல்கிறது. இப்படி நீர்நிலைகளை எல்லாம் தூர்த்து விட்டதால்தான் மதுரையில் நிலத்தடி நீர் 1,500 அடிக்கு கீழே போய்விட்டது. மழை நீர்சேகரிப்பு மையங்களாக இருந்த நீர்நிலைகளைத் தூர்த்து மூடிவிட்டு வீட்டுக்கு வீடு மழைநீர் சேகரிப்பு அமைப்பை நிறுவுங்கள் என்று அரசு சொல்வது வேடிக்கையாக இருக்கிறது.

வனத்துறைக்கே தெரியாத வனங் கள் மற்றும் மண்ணுக்கேற்ற மரங் களை தேடிக் கண்டுபிடித்து மக்களுக் குச் சொல்லும் பணியில் இருக்கிறார் எங்கள் அமைப்பிலுள்ள கார்த்திக். மதுரை அருகே இடையபட்டியில் வெள்ளிமலை காடு இருக்கிறது. சுமார் 400 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த வனத்தில் இப்போது 160 ஏக்கர் மட்டுமே ஆக்கிரமிக்கப்படாமல் இருக்கிறது. இதில் 150 வகை தாவரங்களை கண்டு பிடித்திருக்கிறோம். இதில் 100 தாவரங் கள் மூலிகை வகை. 66 வகையான பறவைகளும் அந்த வனத்தில் இருப் பதை ஆவணப்படுத்தி இருக்கிறோம். இதை வனத் துறையில் சேர்க்க கோரிக்கை அனுப்பி இருக்கிறோம்.

நாம் தினமும் உட்கொள்ளும் உணவில் 15 வகையான ரசாயன நச்சுகள் இருப்பதாகவும் இதில் 12 வகை ரசாயனங்கள் உலக அளவில் தடை செய்யப்பட்டவை என்றும் ஆய்வு கள் சொல்கின்றன. இவை அனைத் துமே ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக் கொல்லிகளால் உண்டாகும் நச்சுகள். ஆக, நாம் இப்போது ஸ்லோ பாய்ஸனை உண்டு கொண்டிருக் கிறோம். இந்த நேரத்தில், ‘என் மக்களுக்கு நஞ்சில்லா உணவை உற் பத்தி செய்துகொடுப்பேன்’ என்று களத் தில் நிற்கும் இயற்கை விவசாயிகளைக் கண்டுபிடித்து உலகத்துக்கு சொல்லி கவுரவிக்க வேண்டியது நமது கடமை. அந்தப் பணியை எங்கள் அமைப்பின் பூபாளன் செய்து கொண்டிருக்கிறார்.

நீர்நிலைகள் உள்ள பகுதிகளில் அபூர்வ வகை பறவையினங்களும் இருக்கும். சாமநத்தம் கண்மாயில் 150 வகையான பறவைகள் இருப்பதை கணக்கெடுத்து அந்தக் கண்மாயை சுற்றுலாத் தலமாக்க அரசுக்கு கோரிக்கை அனுப்பி இருக்கிறோம். இதுகுறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியை எங்களது அமைப்பிலுள்ள போட்டோகிராபர் பிரபாகரன் செய்து கொண்டிருக்கிறார்.

நம்மைப் பற்றியும் நம் மண்ணுக் கான வரலாற்றைப் பற்றியும் நம்மில் பலபேர் அறியாமல் இருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த மண்ணின் மாண்பு களைச் சொல்லும் நிகழ்ச்சிகளை கான்சா சாதிக் நடத்திக் கொண்டிருக் கிறார். சிலம்பம் உள்ளிட்ட தற்காப்புக் கலைகளை பெண்களுக்கு பயிற்று விக்கும் பணியில் கார்த்திகா ஜோதி இருக்கிறார். மக்களிடம் மாற்றுப் பாலினம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பிரச்சாரங்களை எங்கள் அமைப்பில் உள்ள திருநங்கை சொப்ணா முன்னெடுத்துச் செல்கிறார். எங்களது பணிகளையும் பிரச்சாரங் களையும் விடுமுறை நாட்களில் மட்டுமே செய்கிறோம்.

அடுத்தகட்டமாக இயற்கை மருத் துவம், இயற்கை உணவுகள் குறித்து மக்களிடம் பிரச்சாரம் செய்வதற்காக தகுதியான இளைஞர்களை தேடிக் கொண்டிருக்கிறோம். எங்களோடு இணைந்து பணி செய்ய விரும்பும் இளைஞர்கள் 86082 66088 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். எல்லோருக்கும் சனி, ஞாயிறு என்பது ஓய்வுக்கான நாட்கள். நாங்கள் அதை சமூக மாற்றத்துக்கான நாளாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.. பெருமையுடன் சொன்னார் தமிழ்தாசன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x