Published : 16 Sep 2017 11:46 AM
Last Updated : 16 Sep 2017 11:46 AM

‘தி இந்து’ தமிழ்: கல்வி நிலையங்களும் செய்யாத காரியம்! - இமையம்

‘தி இந்து’ தமிழ் நாளிதழ் இன்று ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. வாசகர்களின் ஊக்கத்தாலும், பங்களிப்பாலும் மாற்றங்களுக்குத் தயாராகி வருகிறது. இந்த சூழலில் வாசகர்கள் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கத்துடன் தி இந்து தமிழ் நாளிதழ் குறித்து தமிழகத்தின் மிக முக்கியமான முன்னோடிகள், எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்திருக்கிறார்கள்.

இமையம், எழுத்தாளர், ஆசிரியர்.

நாளிதழை வாங்கியதும் முதலில் நான் படிப்பது நடுப்பக்கக் கட்டுரைகளைத்தான். தமிழக, இந்திய எழுத்தாளர்கள், சமூக சிந்தனையாளர்கள், துறை சார்ந்த நிபுணர்களின் கட்டுரைகளை முழுப் பக்க அளவில் வெளியிடும், அவர்களின் நேர்காணல்களைப் பெரிய அளவில் வெளியிடும் ஒரே தமிழ் நாளிதழ் ‘தி இந்து’.

கல்வி நிறுவனங்கள் செய்யாத காரியத்தை ‘தி இந்து’ செய்கிறது. அதனால்தான் ‘தி இந்து’ நாளிதழ் அறிவியக்கமாகச் செயல்படுகிறது என்று சொல்ல முடியும்.

‘உயிர்மூச்சு’, ‘நலம் வாழ’, ‘இளமை புதுமை’ போன்ற பல்வேறு தரப்பினருக்கான இணைப்பிதழ்களும் எனக்குப் பிடித்தமானவை. எழுத்தாளர்கள் மீது அதிக வெளிச்சத்தைச் செலுத்திய ஒரே நாளிதழ் ‘தி இந்து’.

‘தி இந்து’ நாளிதழின் மொழிநடை கச்சடா மொழியல்ல. ஆங்கிலமும் தமிழும் இரண்டறக் கலந்த கலவையான மொழியல்ல. புலவர் வழக்கு மொழியும் அல்ல. அதனால் நாளிதழைச் சிரமமின்றிப் படிக்க முடிகிறது. ‘தி இந்து’ நாளிதழின் சமூகப் பார்வைக்கு எடுத்துக்காட்டாக இருப்பது ‘நம் கல்வி.. நம் உரிமை’ என்ற தலைப்பில் அரசுப் பள்ளிகள் சார்ந்து வெளியிட்ட தொடர் கட்டுரைகள்.

அனைவரும் படிக்கிற நாளிதழ் என்ற பெயரையும் குக்கிராமங்களிலும் ‘தி இந்து’ கிடைக்கும் என்ற பெயரையும் வாங்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x