Published : 25 Nov 2016 12:17 PM
Last Updated : 25 Nov 2016 12:17 PM

உங்கள் குரல்: தஞ்சாவூரில் மரங்களை பட்டுப்போகச் செய்ய முயற்சி

அடிப்படை வசதிகள் செய்து தரப்படுமா?

திருச்சி திருவெறும்பூர் பகுதியில் உள்ள நேதாஜி நகர், ராவேந்திரா நகர் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர், சாலை, தெரு விளக்கு வசதிகள் சரிவர இல்லை. எனவே, மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த நிலையைப் போக்க மாநகராட்சி அதிகாரிகள் இப்பகுதியைப் பார்வையிட்டு, விரைந்து நடவடிக்கை எடுத்து மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர ஆவண செய்ய வேண்டும்.

-ஒண்டிமுத்து, திருவெறும்பூர்

அரசுப் பேருந்து முன்பதிவு குளறுபடிகள் களையப்படுமா?

திருச்சி மாவட்டம் துறையூரிலிருந்து சென்னைக்கு தினமும் இரவு நேரங்களில் 3 அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஞாயிற்றுகிழமை இரவு நேரத்தில் இந்தப் பேருந்துகளில் முன்பதிவு செய்வதிலும், பயணிகளை ஏற்றிச் செல்வதிலும் குளறுபடிகள் நடைபெறுகின்றன. முன்பதிவு செய்ய வரும் பயணிகளிடம் பேருந்தில் இடம் இல்லை எனக் கூறிவிட்டு, கடைசி நேரத்தில் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு இடம் வழங்குகின்றனர். மேலும், பேருந்து புறப்படும் நேரத்தில் பயணிகளின் அவசரத்தைப் பயன்படுத்தி கூடுதல் கட்டணத்தையும் வசூலிக்கின்றனர். இதனால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.

-ராஜா, துறையூர்

எம்.ஜி.ஆர். சிலை ரவுண்டானாவில் சிக்னல் அமைக்கப்படுமா?

திருச்சி நீதிமன்றத்திலிருந்து அரசு மருத்துவமனைக்குச் செல்லும் சாலையில் அமைக்கப்பட்டுள்ள எம்.ஜி.ஆர். சிலை அமைந்துள்ள ரவுண்டானாவில் போக்குவரத்தை கட்டுப்படுத்தும் சிக்னல் இல்லை. இதனால் அனைத்து வழித்தடங்களிலிருந்தும் வாகனங்கள் கட்டுப்பாடின்றி வருகின்றன. இதனால், இந்த இடத்தில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே, இந்த ரவுண்டானாவில் சிக்னல் அமைத்து, சீரான போக்குவரத்து நடைபெற காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கண்ணன், திருச்சி.

நாய்கள், பன்றிகள் தொல்லையால் மக்கள் அவதி

திருச்சி மாநகராட்சி குமரன் நகரில் மாடு, ஆடு, நாய், பன்றி, குதிரை உள்ளிட்டவை ஏராளமாக உள்ளன. இவைகள் சாலையிலேயே நின்று கொண்டிருப்பதால் வாகனங்கள் செல்ல முடியவில்லை. சாலையில் நடந்து செல்வோரும் மிகுந்த அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். வீடுகள் கட்டப்படாமல் காலி மனைகள் அதிக அளவில் உள்ளதால், அங்கு புதர்கள் மண்டிக் கிடக்கின்றன. இதில் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துகள் அதிகமாக உள்ளன. இதனால் மக்கள் பெரும் அச்சத்துடனேயே வாழ்ந்து வருகின்றனர். மாநகராட்சியிடம் பல முறை புகார்கள் அளித்தும் பயனில்லை. மக்களின் அச்சத்தைப் போக்க இனியாவது மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சுந்தர், திருச்சி.

பொதுமக்களை அவதிப்பட வைப்பது சரியா?

நான்கு நாட்களுக்கு ஒரு முறை, ரிசர்வ் வங்கி புதிய புதிய அறிவிப்புகளை செய்வதால், அன்றாடம் பிழைப்பு நடத்தும் மக்கள் என்ன செய்வார்கள். விலைவாசியைக் குறைக்காமல், வெறுமனே 2,000 ரூபாய் நோட்டுகளை மட்டும்தான் தருவேன் என்றால், அதற்கு சில்லறைக்கு எங்கு போவார்கள். கை செலவுக்கே பணம் இல்லாத நிலையில், வங்கியிலும், ஏடிஎம் மையங்களிலும் கால் கடுக்க நின்றாலும், பணம் கிடைப்பது பெரும் பாடாக உள்ளது. 100, 500 ரூபாய் நோட்டுகள் கிடைப்பதில்லை. மக்களை இப்படி அவதிப்பட வைப்பது சரியா?

-பிரபாவதி, தஞ்சாவூர்.

மரங்களை பட்டுப்போகச் செய்ய முயற்சி

கடந்த 20 ஆண்டுகளாக சாலையோரங்களில் மரம் வளர்த்து வருகிறேன். தஞ்சாவூர், கீழவாசல் சாலை, எஸ்டிஎம் நகரில் அரசுப் புறம்போக்கு நிலத்தில் இருந்த சீமைக் கருவேலங்காட்டை அழித்து, அந்த இடத்தில் 7 ஆண்டுகளாக மரங்களை வளர்த்து வருகிறேன். இந்த, இடத்தை ஆக்கிரமிக்க நினைக்கும் சிலர், மரங்களை பட்டுப்போகச் செய்து வருகின்றனர். இதுவரை, 10-க்கும் மேற்பட்ட மரங்களை பட்டுப்போகச் செய்துவிட்டனர். இவர்களிடமிருந்து மரங்களையும், இந்த இடத்தையும் காப்பாற்ற வேண்டும்.

-ம.யோவான், தஞ்சாவூர்.

புதுக்கோட்டை நூலகத்தில் கழிப்பறை வசதி செய்யப்படுமா?

புதுக்கோட்டையில் உள்ள மாவட்ட நூலகத்தில் தினமும் ஏராளமானோர் புத்தகங்கள் படிக்கவும், நாளிதழ்களைப் படிக்கவும், பல்வேறு குறிப்புகளை எடுத்துக் கொள்ள போட்டித் தேர்வுகளை எழுதுவோரும் வந்து செல்கின்றனர். ஆனால், வாசகர்களுக்கு கழிப்பறை வசதி இல்லை. எனவே, இதுகுறித்து உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கழிப்பறை அமைக்க ஆவண செய்ய வேண்டும்.

-ஆர்.வீரப்பன், செம்பட்டிவிடுதி.

*

‘தி இந்து’ செய்திகளை வாசிக்கும்பொழுதில் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்கள் / திருத்தங்கள் / சந்தேகங்கள் / நீங்கள் எதிர்கொள்ளும் நேரடி பிரச்சினைகள், பார்க்கும் நிகழ்வுகள் - கேட்டறியும் சமூகப் பிரச்சினைகள் என எதுவானாலும் சரி... அலைபேசி மூலம் உடனுக்குடன் தொடர்புகொண்டு உங்கள் குரலில் பதிவு செய்யலாம். நீங்கள் தரும் உபயோகமான தகவல்களை எங்கள் செய்தியாளர்கள் மூலம் சரிபார்த்து செய்தியாக்கக் காத்திருக்கிறோம்.

நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்... கீழே குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக்கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). எதிர் முனையிலிருந்து யாரும் பேச மாட்டார்கள். நீங்கள் கூற வேண்டிய கருத்துக்களை பதிவுக் குரலின் வழிகாட்டுதல்படி, பதிவு செய்யுங்கள்.

உங்கள் குரல் - தொலைபேசி எண்கள் சென்னை, காஞ்சிபுரம்- 044-42890002 | கோவை, திருப்பூர் - 044-42890003 | மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை - 044-42890004 | சேலம், தர்மபுரி, ஓசூர் - 044-42890005 | திருச்சி, தஞ்சாவூர், அரியலூர் - 044-42890006 | புதுச்சேரி - 044-42890007 | வேலூர்- 044-42890008 | தூத்துக்குடி, திருநெல்வேலி- 044-42890009

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x