

திமுகவின் 89 எம்எல்ஏக்கள் அமரும் வகையில் சட்டப்பேரவை வளாகத்தில் வசதியான அறை ஒதுக்க வேண்டும் என அக்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
சட்டப்பேரவை வளாகத்தில் எம்எல்ஏக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அறை ஒதுக்குவது வழக்கம். அரசியல் கட்சிகள் தங்கள் எம்எல்ஏக்கள் கூட்டத்தை நடத்தவும், பல்வேறு பிரச்சினைகள் பற்றி ஆலோசிக்கவும் இந்த அறையை பயன்படுத்துவர்.
கடந்த 2011 தேர்தலில் திமுக 23 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றதால் அதற்கேற்ப சிறிய அறை ஒதுக்கப்பட்டது. தற்போது 89 இடங்களில் திமுக வெற்றி பெற்றுள்ளது. எனவே, அவர்கள் அனைவரும் அமரும் வகையில் வசதியான அறை ஒதுக்க வேண்டும் என சட்டப்பேரவைச் செயலாளர் ஏ.எம்.பி.ஜமாலுதீனிடம் திமுக கொறடா அர.சக்கரபாணி நேற்று மாலை மனு அளித்தார்.