Published : 04 May 2016 10:37 AM
Last Updated : 04 May 2016 10:37 AM

வாக்காளர் வாய்ஸ்: உங்களை கவர்ந்த வாக்குறுதி

இந்த வாரத்துக்கான தலைப்பு:

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்காக பல்வேறு கட்சிகளும் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கைகளில் தங்களை மிகவும் கவர்ந்த வாக்குறுதி/திட்டம் எது? எந்த வகையில் அது முக்கியத்துவம் வாய்ந்தது என்று கருதுகிறீர்கள்.

நெல்லை புகாரி, சேப்பாக்கம்

மதுவிலக்கு, மாதம் ஒருமுறை மின் கட்டணம், பால் விலை குறைப்பு போன்றவை மக்களைக் கவர்ந்துள்ளன.

ஆர்.எத்திராஜன், மேற்கு சைதாப்பேட்டை

அனைத்து கட்சிகளும் மிகவும் சிறப்பாக தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளன. அறிவியல் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கு ஊக்கம் அளிக்கப்படும், கண்டுபிடிப்பாளர்களுக்குத் தேவையான உதவிகள் செய்து தரப்படும் என்ற பிரதான கட்சி ஒன்றின் அறிவிப்பு என்னை மிகவும் கவர்ந்துள்ளது. புதிய கண்டுபிடிப்புகளால்தான் நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல முடியும். அத்துடன் கல்விக் கடன்கள் தள்ளுபடி என்ற அறிவிப்பும் வரவேற்கப்பட வேண்டி யது ஆகும்.

கம்பர்பிரான், கோவிலம்பாக்கம்

பூரண மதுவிலக்குக் கொள்கை படிப்படி யாக அமல்படுத்தப்படும் என்ற அறிவிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

பாண்டியரசி, போரூர்

என்னைக் கவர்ந்த தேர்தல் வாக்குறுதி என்பது அனைவருக்கும் கல்வி மற்றும் மருத்துவம் இலவசம் என்ற அறிவிப்புதான். ஏன் என்றால் கல்வியை இலவசமாகக் கொடுப்பதால் கிராமப்புற மாணவர்கள் நல்ல கல்வியைப் பெற முடியும். எனவே இந்த அறிவிப்பை சிறந்ததாக கருதுகிறேன்.

ராமுலு, பெரம்பூர்

தேர்தல் அறிக்கையில் மின்சாரக் கட்டணம் மாதம்தோறும் கணக்கிடப்படும் என்ற அறிவிப்பால் மின்கட்டணம் பாதியாகக் குறைய வாய்ப்பிருக்கிறது. மாணவர்களுக்கு கல்விக்கடன் தள்ளுபடி என்ற அறிவிப்பு மிகவும் வரவேற்கப்பட வேண்டியது. இதனால் மாணவர்கள் மிகவும் பயன்பெறுவார்கள்.

கு.ரவிச்சந்திரன், சோழிங்கநல்லூர்

முக்கிய கட்சிகள் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், ‘ரேஷன் பொருட் கள் வீடு தேடி வரும்’ என்ற அறிவிப்பு ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கிறது. இத்திட்டம் சாத்தியமில்லை என்று பல கட்சிகள் விமர்சித்தாலும், சமையல் காஸ், பால், செய்தித்தாள், காய்கறிகள் போன்றவை வீடுகளுக்கே நேரடியாக கொண்டு வரப்படுகின்றன. இவை சாத்தியம் என்றால், ரேஷன் பொருட் களை வீடுகளுக்கே கொண்டு வந்து தருவதும் சாத்தியம்தான்.

இத்திட்டம் நிறைவேறி னால், உண்மையில் பலருக் கும் நன்மை கிடைக்கும். குறிப்பாக, ரேஷன் பொருட்களை வாங்க முதியோர்கள் கால் கடுக்க வரிசையில் காத்து நிற்க வேண்டிய அவசியம் ஏற்படாது. வீட்டு வேலைகளை செய்ய முடியாமல் பெண்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், ரேஷன் கடைக்கு சென்று, நாள் முழுக்க காத்திருக்க வேண்டிய நிலை பெண்களுக்கு இருக்காது.

அ.ஞானவேல், திருவள்ளூர்

பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்ற அறிவிப்பு வரவேற்கத்தகுந்தது. தமிழகத்தில் 16 ஆயிரத்து 500 பகுதி நேர ஆசிரியர்கள் இருக்கின்றனர். குறைந்த சம்பளத்தில் பணியாற்றி வரும் இவர்கள் பணி நிரந் தரம் செய்யப்பட்டால், இவர்களது குடும்பங் களில் ஒளியேற்றியது போல இருக்கும். நிறைவேற்றக்கூடிய திட்டத்தை அறிவித் துள்ளது எனக்கு பிடித்துள்ளது.

பெயர் வெளியிட விரும்பாத வாசகர்

தேர்தல் அறிக்கைகளில் இல வசங்களை கொடுக்க மாட்டோம் என்று அறிவித்துள்ள ஒரு முக்கிய கட்சி, இலவசமாக கல்வியைத் தருகிறோம் என்று கூறியிருப்பது வரவேற்கத் தகுந்தது. இது நிச்சயம் பாராட்டப்பட வேண்டியது.

சிவராமன், திருவல்லிக்கேணி

பால் விலை குறைப்பு என்ற திட்டத்தை சிறப்பான அம்சமாக கருது கிறேன். நாம் காலையில் எழுந்தவுடன் வீட்டில் தேநீர் அல்லது காபி அருந்துகிறோம் அல்லது வெளியே டீக் கடைக்காவது சென்று தேநீர் அருந்துகிறோம். மிகவும் அத்தியா வசியமான அந்த பொருள் மீது கவனம் செலுத்தி அதன் விலையைக் குறைப்பதாக உறுதி அளித்திருப்பது வரவேற்கத்தக்கது.

பீமசேனன், ஆவடி

இன்று தமிழகத்தின் மிக முக்கியமான பிரச்சினை மது. காந்தியவாதி சசிபெரு மாள் உயிர் நீத்தும் கூட, இன்னும் இங்கு மதுவிலக்கு சாத்தியமற்றதாகவே தொடர் கிறது. நானும் மதுவினால் பாதிக்கப்பட்டவன். அதனால் இந்த தேர்தலில் மதுவிலக்கு விவ காரத்தை சொல்லும் தேர்தல் அறிக்கைகள் இப்போதைய நிலையில் கவனத்தை ஈர்த் துள்ளது.

அருள்ராஜ், மீஞ்சூர்

இன்று நாகரீக வளர்ச்சி எனும் பெயரில் நம் பண்பாட்டை தொலைத்துக் கொண்டு நிற்கின்றோம். தமிழன் இழந்த விஷயங்கள் இன்று அதிக அளவில் உள்ளன. பாரம்பரி யத்தை, மரபு வழி தொழில்நுட்பங்களை, அறிவுசார் கல்வி முறையை மீட்டெடுப்பதாக ஒரு புதிய கட்சியின் தேர்தல் அறிக்கை உறுதியளிக்கிறது. ரசாயன உரமும், பூச்சிக் கொல்லியும் போட்டு மண்ணை மலடாக்கும் இன்றைய நிலையில், இயற்கை வழி வேளாண் நுட்பங்களை பேசுகின்ற அந்த தேர்தல் அறிக்கைதான் எனது கவனத்தை ஈர்த்தது.

நீங்கள் பதிவு செய்த யோசனைகள் இந்த வாரம் சனிக்கிழமை வரை இங்கு வெளியாகும். இப்போதுகூட நீங்கள் 044-42890002 எண்ணுக்கு அழைத்துப் பதிவு செய்யலாம். அடுத்த வாரத்துக்கான கேள்வி வரும் ஞாயிற்றுக்கிழமை வெளியாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x