Published : 07 Apr 2016 10:24 AM
Last Updated : 07 Apr 2016 10:24 AM

வாக்காளர் வாய்ஸ்: தேர்தல் ஆணைய கட்டுப்பாட்டில் அரசு

இந்த வாரத்துக்கான தலைப்பு



குறுக்கீடுகள் இன்றி, தேர்தலை மேலும் செம்மையாக நடத்துவதற்கு வசதியாக, தேர்தல் ஆணையத்துக்கு வேறென்ன அதிகாரங்கள் கொடுக்கலாம்? தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளில் என்னென்ன மாற்றங்கள் கொண்டு வரலாம்?

நீங்கள் பதிவு செய்த யோசனைகள் இந்த வாரம் சனிக்கிழமை வரை இங்கு வெளியாகும். இப்போதுகூட நீங்கள் 044-42890002 என்ற எண்ணுக்கு அழைத்துப் பதிவு செய்யலாம். அடுத்த வாரத்துக்கான கேள்வி வரும் ஞாயிற்றுக்கிழமை வெளியாகும்.

யுவராஜ், திருவள்ளூர்.

தேர்தல் தேதி அறிவித்தவுடன் அரசு இயந்திரம் தேர்தல் ஆணையத்தின் முழுக் கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும். சட்ட மன்ற உறுப்பினர்களின் அரசு உடைமைகள் மற்றும் பதவிகளை செயலிழக்கச் செய்ய வேண்டும். தேர்தல் அறிவிப்புக்குப் பிறகு முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் முழு நேர கட்சிப் பணியில்தான் ஈடுபடுகிறார்கள்.

எனவே அவர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இதன் மூலம் அதிகாரம், சம்பளம், சலுகைகள் மற்றும் அரசாங்கத்தின் செலவுகளை குறைக்க முடியும். மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தேர் தலில் போட்டியிட தடைவிதிக்க வேண்டும். ஒரு வருடத்துக்கு மேல் சிறை தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும். 60 சதவீத வேட்பாளர்கள் 38 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். 68 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கக் கூடாது.



முருகன், தாம்பரம்.

தற்போதைய வாக்களிக்கும் முறையில் வாக்கு பதிவு மையத்துக்கு செல்வதற்காக நீண்ட தூரம் அலைய வேண்டியுள்ளது. இதைத் தவிர்க்க மொபைல் ஆப் ஒன்றை உரு வாக்கி அதில் கைவிரல் ரேகையைப் பயன் படுத்தி தங்களது வாக்கைப் பதிவு செய்யும் முறையை கொண்டு வரலாம். இதனால் தேவை யற்ற அலைச்சலும், நேரமும் குறையும். அரசுக்கும் பல வழிகளில் செலவு மிச்சம்.



இளங்கோவன், பொன்னேரி

தேர்தல் சிறப்பாக நடைபெறுவதற்கு அரசு ஊழியர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்து வதற்குப் பதிலாக, வேலைவாய்ப்பு அலுவலகத் தில் பதிவு செய்து காத்திருக்கும் இளைஞர் களுக்கு பயிற்சி கொடுத்து அவர்களை பயன்படுத்தலாம். இதனால் அரசியல் கட்சி களுக்கு ஆதரவாக அரசு அலுவலர்கள் செயல் பட முடியாது. மேலும் தேர்தல் நேரத்தில் அரசு அலுவலகங்கள் முடங்கிப்போகும் அபாயமும் இருக்காது. தமிழகத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதுமுதல் இன்றுவரை எந்த அரசு அலுவலகச் சேவையும் பொதுமக்களுக்குக் கிடைக்கவில்லை. அரசு அலுவலகங்களில் எப்போது சென்று கேட்டாலும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் தேர்தல் பணிக்காக வெளியில் சென்றுவிட்டார்கள் என்ற பதில்தான் கிடைக்கிறது.



தணிக்காச்சலம், ஆதம்பாக்கம்

தேர்தல் தேதி அறிவித்த உடன் ஆளுங்கட்சியை முற்றிலும் பதவியிலிருந்து நீக்கிவிட வேண்டும். அரசு அதிகாரிகளை தேர்தல் ஆணையத் தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர வேண்டும். அப்போது தான் அதிகாரிகள் சுதந்திரமாகவும், நியாய மாகவும் செயல்பட முடி யும். இல்லையென்றால் ஆளுங்கட்சியினருக்கு பயந்து பயந்துதான் செயல்படுவார்கள்.



நித்யா, வில்லிவாக்கம்.

தேர்தலில் போட்டியிடுபவர்கள் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது குறித்து ஆதாரத்துடன் தேர்தல் ஆணையத்திடம் புகார் செய்தால், அவர்களை இந்த தேர்தலில் போட்டியிட தேர்தல் ஆணையம் தடை செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் பணம் கொடுத்து வாக்கு வாங்குவதை முற்றிலும் கட்டுப்படுத்த முடியும்.



இமாம்ரபிக், கொளத்தூர்.

ஆட்சியிலுள்ள கட்சியின் பதவிக் காலம் முடிந்தவுடன் அந்த ஆட்சியை முற்றிலும் கலைத்து விட வேண்டும். தேர்தல் ஆணை யத்திடம் ஆட்சி அதிகாரத்தை ஒப்படைத்துவிட்டு, அவர்களின் கட்டுப்பாட்டில் தேர்தல் நடத்தி னால் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது போன்ற செயல்கள் கட்டுப்படுத்தப்படும். தேர்தலும் நியாயமாக நடைபெறும்.



முருகன், திருவல்லிக்கேணி.

கட்சிக்காரர்கள் வாக்காளர் களுக்கு பணம் கொடுப்பதைத் தடுக்க தேர்தல் ஆணையம் கடுமையான சட்டத்தை பிறப்பித்து, பணம் கொடுப்பவர்களை முடக்க வேண்டும். மக்கள் அளிக்கும் புகார் குறித்து உடனடியாக ஆய்வு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும்.



சுகுணதயாபரன், திருமுல்லைவாயில்

தேர்தல் ஆணையம் பதிவு செய்யும் விதிமீறல் பற்றிய வழக்குகளின் தீர்ப்புகள் உடனடியாக வருவதில்லை. தேர்தல் முடிந்த பிறகு இதன் மீதான ஆர்வம் குறைந்து விடுவதால் யாரும் கண்டுகொள்வதில்லை. இதுபோன்ற விதிமீறல்களுக்கு உடனடியாக தண்டனை வழங்கும் அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு கண்டிப்பாக வழங்கப்பட வேண்டும். நிறைய இடங்களில் பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்கிறார் கள். இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட பணம் மீண்டும் உரியவர்களிடம் ஒப்படைக் கப்படுகிறதா என்ற விவரத்தை தேர்தல் ஆணையம்தான் வெளியிட வேண்டும்.



அய்யனார், கொடுங்கையூர்

ஆதாரத்துடன் எந்தக் கட்சிக்காரர்கள் புகார் கொடுத்தாலும் தேர்தல் ஆணையம் அதன்மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய போலீஸ் ரோந்து வந்து வாக்காளர்களுக்கு பணம் கொடுப் பதை தடுக்க வேண்டும். ஒரு தொகுதி யில் ஏதாவதொரு குறிப்பிட்ட கட்சியினர் தொடர்ந்து விதிமீறல்களில் ஈடுபட்டுவந் தால், சம்பந்தப்பட்ட கட்சியினர், அத்தொகுதி யில் போட்டியிட தடை விதிக்கும் அதிகாரத்தை தேர்தல் ஆணையத்துக்கு தர வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x