Published : 13 Apr 2016 10:52 AM
Last Updated : 13 Apr 2016 10:52 AM

வாக்காளர் வாய்ஸ்: எதைப் பார்த்து ஓட்டு?

இந்த வாரத்துக்கான தலைப்பு



வருகின்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில், எதை பிரதான அம்சமாகக் கருதி வாக்களிக்க வேண்டும்? கட்சியா... அதன் தலைவர் மீதான ஈடுபாடா... அல்லது, உங்கள் தொகுதி வேட்பாளரா..? இதில் எதுவானாலும் கட்சி/தலைவர்/வேட்பாளரின் எந்தத் தகுதிக்கு முதலிடம் அளித்து வாக்களிக்க முடிவு செய்ய வேண்டும்?

நீங்கள் பதிவு செய்த யோசனைகள் இந்த வாரம் சனிக்கிழமை வரை இங்கு வெளியாகும். இப்போதுகூட நீங்கள் 044-42890002 என்ற எண்ணுக்கு அழைத்துப் பதிவு செய்யலாம். அடுத்த வாரத்துக்கான கேள்வி வரும் ஞாயிற்றுக்கிழமை வெளியாகும்.

ஆர்.கண்ணன், பெருங்குடிவாக்கம்

தேர்தல் அறிக்கையை வைத்துதான் வாக்களிப்போம்.



சந்திரசேகரன், ஜார்ஜ்டவுன்

கட்சிகளின் குறைந்தபட்ச செயல்திட் டத்தை கவனத்தில் கொண்டே இந்த சட்டமன்றத் தேர்தலில் வாக்களிப்போம்.



மணி, பெருங்களத்தூர்

எந்த வாக்காளர்களுமே நேர்மையானவர்களாக இல்லை. யாருக்கு ஓட்டுப் போட்டும் ஒன்றும் நடக்கப் போவதில்லை. எனவே நான் நோட்டாவுக்கே வாக்களிப்பேன்.



வசந்தி சாய்ராமன், கிரீன்வேஸ் சாலை

கட்சித் தலைவரை நம்பித்தான் நாங்கள் வாக்களிப்போம். கட்சித் தலைவர் தகுதி வாய்ந்த ஒருவரைத்தான் வேட்பாளராக நிறுத்துவார். அதை நம்பித்தான் வாக்களிப்போம்.



பாஸ்கர், வடபழனி

கட்சிகளின் அடிப்படையில் வேட்பாளரை தேர்வு செய்யக்கூடிய நடைமுறை நீக்கப்பட வேண்டும். ஒவ்வொரு கட்சியை சேர்ந்தவரும் அவர் சார்ந்த கட்சித் தலைவர்கள் என்ன தப்பு செய்தாலும் அதை நியாயப்படுத்தி, அந்த தலைவர் தவறே செய்யாதவர் என்று நம்பும் அளவுக்கு அதீத கட்சி விசுவாசம் கொண்டவர்களாக மாறிவிட்டனர். இதனால், கட்சி சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர் குற்றப்பின்னணி கொண்டவராக இருந்தாலும், ஒழுக்கக் குறைபாடு கொண்டவராக இருந்தாலும் கண்ணை மூடிக்கொண்டு, கட்சி மேலிடம் அறிவித்த வேட்பாளர், அதனால் கட்சியின் சின்னத்துக்கு வாக்களிப்பேன், வேட்பாளரைப் பற்றி கவலையில்லை என்று மக்களில் பலர் கூறுகின்றனர். இதனால்தான் நாட்டில் ஊழல், லஞ்சம், கொள்ளை, கொலை போன்ற குற்றங்கள் பெருகிவருகின்றன. எனவே, கட்சி அடிப் படையில் வேட்பாளரை தேர்வு செய்வதை நிறுத்தினாலே நாட்டில் ஜனநாயகம் தழைத் தோங்கும்.



கமல், திருவல்லிக்கேணி

வேட்பாளரின் கல்வி மற்றும் நிர்வாகத்திறன் ஆகியவற்றை ஆராய்ந்து, வேட்பாளரை தேர்வு செய்யும் நடைமுறையை தேர்தல் ஆணையம் வழங்க வேண்டும். ஒரு வேட்பாளர் குற்றப்பின்னணி இல்லாத குடும் பத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். குடும்பத்தினர் குற்றச் செயல்களில் ஈடுபடு பவராக இருந்தால், வேட்பாளர் எம்எல்ஏ வானதும் அவரது அதிகாரத்தைப் பயன்படுத்தி முறை கேட்டில் ஈடுபட வாய்ப்பு ஏற்படும்.

தொகுதி பிரச்சினை கள் குறித்து மக்கள் முறையிடச் செல்லும் போது மிரட்டப்படும் ஆபத்து போன்றவை இருக்கும். வேட்பாள ருக்கு கட்டாயம் கல்வித் தகுதியை நிர்ணயிக்க வேண்டும். அறிவியலும் நாக ரீகமும் போட்டி போட்டிக் கொண்டு வள ரும் இக்காலத்தில் கல்வியறிவு இருப்ப வரால்தான் மக்களின் பிரச்சினைகளை புரிந்து கொள்ளவும், தொகுதிக்கான எதிர்கால திட்டமிடலை உருவாக்கி, செயல்படுத்தவும் முடியும்.



அனந்தகிருஷ்ணன், குரோம்பேட்டை

வரும் சட்டமன்றத் தேர்தலில் ஊழல் இல்லாத, மது இல்லாத ஒரு ஆட்சி மலர வேண்டும். அதற்கு எந்தக் கட்சி வழிவகுக்கும் என ஆராய்ந்து அறிந்து வாக்களிப்பேன்.



பெயர் வெளியிட விரும்பாத வாசகர், திருவள்ளூர்

சட்டமன்றத் தேர்தல் மட்டு மல்ல, அனைத்து தேர்தல்களி லுமே அரசியல் கட்சிகளின் தலைமையை மட்டுமே பிரதான அம்சமாகக் கருத முடியும். தமிழகத்தில் இன்றுள்ள நிலை யில் பெரும்பாலான கட்சியினரும் தலைமைக்கு கட்டுப்பட்டவர் களாகவே இருக்கிறார்கள். அந்த வகையில் பார்த்தால் தலைமை அடிப்படையில் வேட்பாளர்களை தேர்வு செய்வதுதான் சரி. மற்றொரு வகையில் பார்த்தால், கட்சியின் தலைமை சரியாக இருக்கும் போது, அதன் செயல்பாடுகள் அடிமட்ட பிரதிநிதிகள் வரை எதிரொலிக்கும்.

சட்டப்பேரவைத் தேர்தலைப் பொறுத்தவரையில், முதல்வ ரின் உத்தரவின்படியே அனைத்து சட்டப் பேரவை உறுப்பினர்களும் செயல்பட வேண் டிய நிலை இருக்கிறது. எனவே சரியான திட்டமிடலையும், வளர்ச்சியையும் நோக் கிய தலைமையை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் வாக்காளர்களுக்கு உள்ளது. தலைமை சரியில்லாத போது, அந்த கட்சியே விமர்சிக்கப்படும், அதேபோல மொத்த ஆட்சியும் விமர்சிக்கப்படும். அதே வேளையில் கட்சித் தலைமையோ, நாம் தேர்வு செய்யும் முதல்வரோ சிறப்பாக செயல்பாட்டால் அதன் தாக்கம் மாநிலம் முழுவதும் இருக்கும்.

கட்சித் தொண்டர்களாக இருந்தால் மட்டுமே அவர்கள், கட்சியை வைத்து வாக்களிப்பார்கள். ஆனால் சிந்திக்கக்கூடிய நடுநிலையாளர் கள், தலைமையின் அடிப்படையிலேயே ஆட்சியைத் தேர்வு செய்ய விரும்புவார்கள்.



பெயர் வெளியிட விரும்பாத வாசகர்

தமிழக சட்டமன்றத் தேர்தலில் கட்சி மற்றும் அதன் தலைவருக்கு முக்கியத்துவம் கொடுத்தே வாக்களிப்பேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x