Published : 05 Feb 2016 10:58 AM
Last Updated : 05 Feb 2016 10:58 AM

சூரிய ஒளி மின்சார நீர்பாசனத்தில் ஏக்கருக்கு 4,500 கிலோ நெல் உற்பத்தி- நவீன தொழில்நுட்பத்தில் விவசாயி சாதனை

விதைப்பு முதல் அறுவடை வரை நவீன தொழில்நுட்பங்களை பயன் படுத்தி, சூரிய ஒளி மின்சாரத்தில் ஏக்கருக்கு 4,500 கிலோ நெல் உற்பத்தி செய்து சாதித்துள்ளார் மதுரையைச் சேர்ந்த முன்னோடி விவசாயி. அவருக்கு கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம் ‘வேளாண்மை செம்மல்’ விருது வழங்கி கவுரவித்துள்ளது.

நெல் சாகுபடியில் மின்தடை, தண்ணீர் பற்றாக்குறை, நோய் தாக்குதல் உள்ளிட்ட சோதனை களை கடந்து, சராசரியாக ஏக்க ருக்கு 2,000 முதல் 3,000 கிலோ மக சூல் பெறுவதே அரிதான விஷயம்.

மதுரை அருகே குலமங்கலத் தைச் சேர்ந்த விவசாயி வி. கிருஷ் ணன், விதைப்பு முதல் அறுவடை வரை நவீன தொழில்நுட்பங்களை பின்பற்றி, ஏக்கருக்கு சராசரியாக 4,500 கிலோ முதல் 4,800 கிலோ வரை நெல் மகசூல் செய்து சாதித்து வருகிறார்.

இவருக்கு கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் ‘வேளாண்மை செம்மல்’ விருது வழங்கி கவுரவித்துள்ளது.

இதுகுறித்து விவசாயி கிருஷ் ணன் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

25-வது வயதில் ஆரம்பித்து 35 ஆண்டுகளாக விவசாயம் செய் கிறேன். 2011-ம் ஆண்டு, மதுரை மாவட்ட அளவில் நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தும் ‘முன் னோடி விவசாயி’ விருதை ஆட்சி யர் உ. சகாயத்திடம் பெற்றேன். இந்த விருதுதான் என்னை சாதிக்க தூண்டியது. 2012-ல் மத்திய வேளாண்மைத் துறை அமைச்ச கம், தேசிய அளவில் 5 ஏக்கர் வரை வைத்திருக்கும் விவசாயி கள், 5 முதல் 20 ஏக்கர் வைத்தி ருப்போர், 20 ஏக்கருக்கு மேல் வைத் திருப்போர் என தனித்தனியாக பயிர் விளைச்சல் போட்டியை நடத்தியது. அதில் ஒவ்வொரு பிரிவிலும், அதிகபட்ச நெல் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு ரொக்கப் பரிசு, பதக்கம் வழங்கப்பட்டது. 5 ஏக்கர் பிரிவுக்கான போட்டியில் ஏக்க ருக்கு 4,800 கிலோ நெல் அறுவடை செய்து சாதித்த எனக்கு, அப் போதைய வேளாண்மைத் துறை அமைச்சர் சரத்பவார், ‘சாம்ராட் சமிருதி அக்ரி’ விருதுடன் ஒரு லட் சத்து 11 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசும் வழங்கினார்.

2013- ல் தமிழக அளவில் நடந்த பயிர் விளைச்சல் போட்டியில் 2-ம் பரிசு பெற்றேன். 2015-ம் ஆண்டில் சிறந்த உழவர் ஊக்குவிப்பாளர் விருதை தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர் அக்ரி கிருஷ்ண மூர்த்தியிடம் பெற்றேன்.

கடந்த மாதம் 8-ம் தேதி, கோவையில் நடந்த நிகழ்ச்சியில் விதைப்பு முதல் அறுவடை வரை நவீன தொழில்நுட்பங்களை பயன் படுத்தி, சூரிய ஒளி மின்சாரத்தில் தொடர்ந்து 5 ஆண்டுகள் திருந்திய நெல் சாகுபடியில் ஏக்கருக்கு சரா சரியாக 4,500 கிலோ நெல் அறு வடை செய்ததற்காக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் ‘வேளாண்மை செம்மல்’ விருது வழங்கியுள்ளது. நவீன தொழில் நுட்பங்களை நான் பின்பற்றிய தோடு, மற்ற விவசாயிகளையும் பின்பற்ற வைத்ததற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது என் றார்.

ஆண்டுக்கு ரூ. 3.60 லட்சம் வருவாய்

கிருஷ்ணன் மேலும் கூறுகையில், ‘‘ஆரம்பத்தில் ஆயில் மோட்டார் மூலம் தண்ணீர் பாசனம் செய்தேன். தற்போது சூரிய ஒளி மின்சாரம் மூலம் சாகுபடி செய்வதால் மூன்று போக சாகுபடி செய்கிறேன். ஆற்றில் தண்ணீர் இல்லை. மழையில்லை என்ற கவலை இல்லை. நெல் சாகுபடி செய்ய ஏக்கருக்கு ரூ.12 ஆயிரம் வீதம் 5 ஏக்கருக்கு ரூ. 60 ஆயிரம் செலவாகிறது.

ரூ.1.80 லட்சம் வருமானம் கிடைக்கிறது. செலவு ரூ. 60 ஆயிரம் போக ஒருபோகத்துக்கு ரூ. 1.20 லட்சம் லாபம் கிடைக்கிறது. மூன்று போகம் சேர்த்தால் ஆண்டுக்கு ரூ. 3.60 லட்சம் கிடைக்கிறது. களை எடுக்க மட்டுமே ஆட்களை பயன்படுத்துவேன். நானே உரம் இட்டு, தண்ணீர் பாசனம் செய்கிறேன். அதனால், கூலியாட்கள் செலவும் மிச்சம். விவசாயத்தை தொழிலாக நினைக்காமல் விரும்பி செய்தால் லாபம் கிடைக்கும்’’ என்றார். விவசாயி வி. கிருஷ்ணன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x