

சங்கீத கலாநிதி தவில் வித்வான் வலையப்பட்டி சுப்ரமணியத்தின் 75-வது பிறந்த நாள் விழா, சென்னை, ஹேமமாலினி திருமண மண்டபத்தில் கடந்த ஞாயிறன்று விமரிசையாக நடந்தது. மாலை 4 மணிக்கு தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் ஏராளமான கலைஞர்கள் கலந்துகொண்டனர்.
மங்கல இசை, லால்குடி கிருஷ்ணன், லால்குடி விஜயலஷ்மி இருவரின் வயலின் இசை நிகழ்ச்சிகள் ஆகியவற்றுக்குப் பிறகு நல்லி குப்புசாமி, சுவாமி ஓம்காரனந்தா, மருத்துவர் மயில்வாகனன், நீதிபதி முருகபூபதி ஆகியோர் வலையப்பட்டி சுப்ரமணியத்தை பாராட்டிப் பேசினர்.
சுவாமி ஓம்காரனந்தா பேசும்போது, “புதுக்கோட்டையில் இரண்டு முறை 108 தவில் கலைஞர்களை ஒன்றிணைத்து வலையப்பட்டி சுப்ரமணியம் நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறார். எங்கள் ஆசிரமத்தில் ஹோமம் நடத்தும்போதும் வலையப்பட்டி தன்னுடைய கலைஞர்களுடன் வந்திருந்து வாசித்து சிறப்பு செய்தார். ஆகமங்களில் ஆலயங்களில் நடக்கும் சடங்குகளின்போது என்னென்ன ராகங்களை வாசிக்க வேண்டும், எந்த திசையில் சுவாமி ஊர்வலம் வரும்போது என்ன ராகம் வாசிக்க வேண்டும் என்றெல்லாம் குறிப்புகள் இருக்கின்றன. மங்கல வாத்தியங் களான நாகஸ்வரமும் தவிலும் இறைத் திருப் பணிகளோடு இரண்டறக் கலந்தவை” என்றார்.
ஏற்புரையாற்றிய வலையப்பட்டி சுப்ரமணி யம், ‘‘மேடையில் யாரா வது பாராட்டிப் பேசி னால் இன்னும் கொஞ்ச நேரம் பாராட்டிப் பேச மாட்டாங்களான்னு நினைச்ச காலம் உண்டு. அது சின்ன வயசு. இப்போ இவங்க என்னைப் பாராட்டும்போது, கூச் சமா இருக்குய்யா…” என்றார்.
மேலும் அவர் பேசிய தாவது:
நூற்றுக்கணக்கான தவில் கலைஞர்களை ஒருங்கிணைத்து வாசிப்பது இத்தோடு பதினான்காவது முறை. இதில ஒரு வெள்ளி விழா கொண்டாடணும்னு ஆசை இருக்கு… பார்க்கலாம்… ஆண்டவன் சித்தம். இன்னைக்கு வாசிக்கிற கலைஞர்கள் ஆந்திர மாநிலத்தின் பல மாவட்டங்களில் இருந் தும் தமிழகத்தின் சில மாவட்டங்களி லிருந்தும் வந்திருக்காங்க. டாக்டர் மயில் வாகனன், நல்லி குப்புசாமி இவங்க இரண்டு பேரும்தான் இந்த நிகழ்ச்சி நடக்கிறதுக்கு முக்கியக் காரணம். அவங்களாலதான் இந்த நிகழ்ச்சி சாத்தியமாச்சு.
1963-ம் ஆண்டு. சென்னை, ஆபர்ட்ஸ்பெரி திருமண மண்டபத்தில் முரசொலி மாறன் திருமணம். சென்னைக்கு வந்து நான் வாசித்த முதல் நிகழ்ச்சி அதுதான். நிகழ்ச்சிக்கு வந்திருந்த இசை மேதை எம்.எஸ்.சுப்புலட்சுமியும் நாட்டிய மேதை பாலசரஸ்வதியும் என்னைப் பாராட்டினாங்க. மறக்க முடியாத தருணங்கள் அவை. அந்த இசை மேதையின் நூற்றாண்டு இது. இந்த நிகழ்ச்சி அவங்களுக்கு எங்களுடைய இசை அர்ப்பணம்.
இவ்வாறு அவர் பேசினார்.
தமிழ்நாட்டிலேயே தமிழ் தெரியாத குழந்தை கள் வளரும் கல்விச் சூழலைக் குறித்த ஆதங்கத்தையும் தன் பேச்சில் அவர் வெளிப் படுத்தினார்.
இறுதியாக, நூற்றுக் கணக்கான தவில் கலை ஞர்கள் வலையப்பட்டி யுடன் இணைய, கம்பீர நாட்டையில் வெளிப் பட்டது மல்லாரி. தொடர்ந்து அன்னமாச் சார்யாவின் கீர்த்தனை, `சின்னஞ்சிறு பெண் போலே சிற்றாடை உடை உடுத்தி’ போன்ற உருப் படிகள் அடுத்தடுத்து நாதலய பிரவாகமாக உரு வெடுத்து, பனி விழும் அந்த இரவுப் பொழுதை மிகவும் இனிமையாக்கின.
படங்கள்: யோகா