Published : 23 Nov 2015 09:41 AM
Last Updated : 23 Nov 2015 09:41 AM

பருவமழை தீவிரமடைந்த நிலையிலும் 747 கால்நடை மருத்துவர் பணியிடம் நிரப்பப்படாததால் சிக்கல்: நோய் பரவலை தடுப்பதில் பெரும் சிரமம்

தமிழகத்தில் 747 கால்நடை மருத்து வர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளதால், வடகிழக்குப் பருவ மழையின்போது ஏற்படும் தொற்று நோய் பரவலை தடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் கால்நடைகள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் 91 லட்சத்து 41 ஆயி ரம் மாடுகள், 16 லட்சத்து 58 ஆயிரம் எருமை மாடுகள், 3 லட்சத்து 21 ஆயிரம் பன்றிகள், 55 லட்சத்து 93 ஆயிரம் செம்மறி ஆடுகள், 88 லட்சத்து 77 ஆயிரம் வெள்ளாடுகள் உள்ளன. இந்த கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க 2,356 கால்நடை மருத்துவமனைகள் உள்ளன.

இந்த மருத்துவமனைகளில் 747 கால்நடை மருத்துவர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அதனால் ஒவ்வொரு மருத்துவரும் 10 முதல் 15 கி.மீ. தொலைவில் உள்ள மருத்துவமனைகளை கூடுதல் பொறுப்பாக கவனிக்கின்றனர்.

வடகிழக்குப் பருவ மழை தற் போது தீவிரமடைந்துள்ளது. அதனால், கால்நடைகளுக்கு புட் அண்ட் மவுத், சப்பை நோய், தொண்டை அடைப்பான் நோய் கள் பரவுகின்றன. கால்நடை மருத் துவர்கள் பற்றாக்குறையால் கால் நடைகளுக்கு தடுப்பூசி, மருந்து வழங்கி இந்நோய்களை தடுப் பதிலும், கண்காணிப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து கால்நடை மருத்து வர்கள் கூறியதாவது:

மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு 640 மருத்துவர்கள் தற்காலிகப் பணியாளர்களாக நியமிக்கப்பட் டனர். அதன்பின் இதுவரை நியமிக் கப்படவில்லை. தற்போது 747 கால் நடை மருத்துவர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. ஒரு கால்நடை மருத்துவமனையின் கீழ் குறைந்த பட்சம் 10 கிராமங்கள் உள்ளன.

இந்த கிராமங்களில் 10 ஆயிரம் மாடுகள், 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் ஆடுகள் இருக்கும். அதுபோக நாட்டுக்கோழிகளும் வளர்ப்பார்கள். இந்த கால்நடை களுக்கு 6 மாதங்களுக்கு ஒரு முறை நேரில் சென்று தடுப்பூசி போட வேண்டும்.

ஆடு, மாடுகளுக்கு நோய் வந் தால் உடனே அவற்றுக்கு தடுப்பூசி, மருந்து போட வேண்டும். நோய் வந்து இறக்கும் கால்நடைகளை பிரேதப் பரிசோதனை செய்து அதன் உரிமையாளர்களுக்கு நிவா ரண உதவி பெற்றுத்தர வேண்டும்.

நாட்டுக் கோழிப் பண்ணை திட்டம், தீவன அபி விருத்தி திட்டங்களை செயல் படுத்தி, அவற்றையும் கண்காணிக்க வேண்டும். மழை பெய்தால் 10 நாட்களுக்கு ஒருமுறை ஏதாவது கிராமத்தில் இலவச மருத் துவ முகாம் நடத்த வேண்டும்.

வேலைப்பளு அதிகம்

கால்நடை பாதுகாப்பு திட்டத் தில் ஒரு பஞ்சாயத்தில் ஒரு கிரா மத்தை தேர்வு செய்து அங்கு தனியாக மருத்துவ முகாம் நடத்த வேண்டும். பால் உற்பத்தி குறையும் கால்நடைகளை கண்ட றிந்து நேரில் சென்று அந்த கால் நடைக்கு மினரல் மிக்சர் பாக்கெட் இலவசமாக வழங்க வேண்டும்.

அதன்பின் அந்த கால்நடை கூடுதல் பால் கொடுக்கிறதா எனக் கண்காணிக்க வேண்டும். கூடுதல் வேலைப் பளுவால் முழுமையாக தடுப்பூசி போட முடியவில்லை.

இவ்வாறு அவர்கள் தெரிவித் தனர்.

அதிகரிக்கும் போலி மருத்துவர்கள்

இதுகுறித்து கால்நடை மருத்துவர்கள் கூறியதாவது:

ஒரு மருத்துவமனையில் கால்நடைகளை பார்த்துவிட்டுத்தான் கூடுதல் பொறுப்பாக கவனிக்கும் மருத்துவமனைகளுக்கு செல்ல முடிகிறது. அதுவரை கால்நடை வளர்ப்போர் காத்திருக்கமாட்டார்கள்.

கால்நடை மருத்துவர்களில் 50 சதவீதம் பேர் பெண்கள். இவர்கள் கூடுதல் பொறுப்பாக மற்ற மருத்துவமனைகளை கவனிக்கும்போது மிகவும் சிரமப்படுகின்றனர்.

ஆடு, மாடுகளுக்கு மருத்துவர்களை அணுகி தடுப்பூசி, மருந்து போடுவது மிகக் குறைவு. அவர்களாகவே கடைகளில் மருந்துகளை வாங்கி போடுகின்றனர். இதுபோல மாடுகள் வளர்ப் போரும் அலட்சியம் காட்டுகின்றனர். மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும்போது கடைசி கட்டத்தில் வருகின்றனர். இதை பயன்படுத்தி போலி மருத்துவர்கள் கால்நடைகளுக்கு தடுப்பூசி போடுவது அதிகரித்துள்ளது. இவர்களை கண்காணிக்க ஆளில்லை. பொதுமக்களும், நோய் சரியானால் சரி எனக் கருதி அவர்களிடம் தடுப்பூசி போடுகின்றனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x