

நாம் வினோதமான, முன்னெப்போதும் இல்லாத வகையிலான ஒரு காலகட்டத்தில் வாழ்ந்து வருகிறோம். கோவிட்-19 தொற்று நம்மை வீட்டிலேயே முடக்கியுள்ளது. அது நம் வாழ்க்கையை மந்தமாகவும், சுவாரசியமற்றதாகவும் மாற்றியிருக்கிறது என்பதை நாம் ஏற்றுக்கொண்டாக வேண்டும்.
இதோடு சேர்த்து நம் வீட்டு வேலைகளையும், அலுவலக பொறுப்புகளையும் ஒரே நேரத்தில் சமாளிப்பது விஷயங்களை இன்னும் சிக்கலாக்கியுள்ளது. இது போன்ற சமயங்களில் தான் நம் வாழ்வை சுவாரசியமாக்க, நமக்குக் கொஞ்சம் பரபரப்பும், உற்சாகமும் தேவைப்படுகிறது.
இங்கு தான் ஜீ 5 தனது ஸ்ட்ரீமிங் சேவை மூலம் நமது தேவையை பூர்த்தி செய்கிறது. பிப்ரவரி 2020லிருந்து இன்று வரை புதிது புதிதாக பல்வேறு சுவாரசியமான நிகழ்ச்சிகளை அறிமுகம் செய்து வருகிறது. இதில் முக்கியமாக மூன்று நிகழ்ச்சிகள், நமது ஊரடங்கு வாழ்க்கைக்குத் தேவையான பரபரப்பையும், மர்மத்தையும், உற்சாகத்தையும் கண்டிப்பாகக் கூட்டும்.
அந்த மூன்று நிகழ்ச்சிகள்..
அரிவான்
இந்த நிகழ்ச்சியின் கதையானது, 42 வயதான விவாகரத்து பெற்ற, ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியாயிருந்து முடி திருத்துநராக மாறிய ஹரியின் வாழ்க்கையை விவரிக்கிறது. சமூக ஓட்டத்திலிருந்து விலகி, ஓய்வுபெற்ற புகைப்படக் கலைஞரான தன் தந்தையுடன் சேர்ந்து, ஒரு சாதாரண வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் ஹரி. இச்சூழலில் ஒரு சிறு பெண் காணாமல் போகிறாள். ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி நேரலையின் போது கடத்தல்காரன் ஹரியை அழைக்கின்றான். இது ஹரிக்கு அவரது கடந்த காலத்தில் இதே போல நடந்த ஒரு சம்பவத்தை நினைவுக்குக் கொண்டு வருகிறது. அன்று, பல சிறுமிகள் கடத்திக் கொல்லப்பட்ட ஒரு வழக்கின் விசாரணை அதிகாரியாக இருந்தவர் ஹரி.
6 ஆண்டுகளுக்கு ஹரி எல்லாவற்றையும் இழக்க காரணமாயிருந்த தனது ஆறாம் அறிவை மீண்டும் பயன்படுத்துவார? காணாமல் போன ஹரியின் உடன்பிறவா சகோதரன் தேவாவுக்கு என்ன ஆனது? அந்த முகம் தெரியாத கொலைகாரனை இருவரும் சேர்ந்து பிடிப்பார்களா?
நடிகர்கள்: ஜபுதீன், ஜேம்ஸ்குமார், காயத்ரிசேகரன், செளந்தரி, ஆர்வெங்கா
உயிரே
ராகவன் மற்றும் அவரது குடும்பத்தினர் நிறைவான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். அவரது தந்தை ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி, தாய், கனிவானவள், ஆதரவு தருபவள், மேலும் அவரது மூன்று மகள்கள் புத்திசாலிகள், திறமைசாலிகள்.. ஆனால் இதுநாள் வரை வெளிவராத பழைய ரகசியங்கள் தெரியவரும்போது அவை, அவர்களின் மகிழ்ச்சி, செல்வம், அசைக்க முடியாத குடும்பப் பிணைப்பு என அத்தனைக்கும் அச்சுறுத்தலாக மாறுகிறது. அவர்கள் தப்பிப் பிழைப்பார்களா?
நடிகர்கள்: அரவிந்த்நாயுடு, புரவலன், குணா, இந்திரன், அஸ்வினி, மாலீன், நிஷாகுமார், ஜேம்ஸ்குமார், தவநேசன்
வேட்டை
தயாநிதி, ஓய்வு பெறுவதற்கு சில நாட்களுக்கு முன்னர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுக் கிடப்பதிலிருந்து கதை தொடங்குகிறது.
இந்திய சமூகம் மற்றும் புலம்பெயர்ந்தோர் தொடர்பான பழைய வழக்குகளை விசாரிப்பதற்கான சிறப்புத் தனிப் படையின் தலைவராக இருந்தவர் தயாநிதி. அவரது திடீர் மறைவு, அந்த அணியைத் தலைவரின்றி தத்தளிக்க வைக்கிறது.
நிலுவையில் உள்ள வழக்குகளை இந்த அணி எப்படி தீர்த்து வைக்கும்? தயாநிதியின் கொலையாளியையும் இந்த அணியால் பிடிக்க முடியுமா?
நடிகர்கள்: ஷபீர், சதீஷ், குணாளன், விக்னேஸ்வரன், காயத்ரிசேகரன், ரிஷிகுமார்
இது போன்ற காலகட்டத்தில், இந்நிகழ்ச்சிகள் தான் நம் வாழ்க்கையில் உற்சாகத்தை, பரபரப்பை, மர்மத்தை சேர்க்கின்றன. இதை நாம் நம் நாம் நம் வீட்டில் சவுகரியாமாக இருந்தபடியே பார்க்க உதவும் ஸ்மார்ட்ஃபோன்களுக்கும் Zee5-க்கும் நன்றி