Published : 16 May 2020 10:46 AM
Last Updated : 16 May 2020 10:46 AM

அமிர்தா ஸ்கூல் ஆஃப் இன்ஜினியரிங் மற்றும் ‘இந்து தமிழ் திசை’ இணைந்து நடத்தும் ‘webinar’ எனும் இணைய வழி சந்திப்பு

சென்னை.

கோவிட்-19 தொற்றுநோயின் தாக்கத்தால் உலகமே தற்போது ஒரு கடினமான சூழலை எதிர்கொண்டுள்ளது. இதில், கல்வி மற்றும் தொழில்துறையும் பெரிதும் பாதிப்பினைச் சந்தித்துள்ளன. இந்த ஊரடங்கு காலத்திற்குப் பின்னர், கல்வி மற்றும் தொழில் சார்ந்த துறைகளில் செயற்கை நுண்ணறிவு (ஆர்டிஃபிஷியல் இண்டலிஜென்ட்ஸ்) மற்றும் இணையம் (இன்டர்நெட் ஆஃப் திங்ஸ்) உண்டாக்கும் விளைவுகள் பற்றி ஆராயும் வகையில் அமிர்தா ஸ்கூல் ஆஃப் இன்ஜினியரிங் மற்றும் ‘இந்து தமிழ் திசை’ இணைந்து ‘webinar’ எனும் இணைய வழி உரையாடலை நடத்தவுள்ளது. இந்த இணைய வழி உரையாடல் நாளை (மே17, ஞாயிறு) நடைபெறவுள்ளது.

பிளஸ் 2 படித்த மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேர விரும்புகிறார்கள். பொறியியலில் எந்தப் பாடப்பிரிவில் சேர்ந்து படிப்பது என்கிற கேள்வி இன்றைய மாணவர்களிடத்தில் உள்ளது. பொறியியல் படிப்பில் அடுத்த 4 ஆண்டுகாலம் என்னவாக இருக்கும் என்பதைக் கருத்தில் கொள்ளாமல், அடுத்த 10 ஆண்டுகளில் அப்படிப்புக்கான எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை மனதில்கொண்டு அதற்கேற்ப சேர வேண்டியது மிகவும் அவசியம். செயற்கை நுண்ணறிவு (ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ட்ஸ்), இணையம் (இன்டர்நெட் ஆப் திங்க்ஸ்) ஆகிய 2 துறைகளும் வருங்காலத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்த துறைகளாக இருக்கப் போகின்றன.

நவீன அறிவியல் தொழில்நுட்பம் வளர்ந்துவரும் இக்காலச் சூழலில், செயற்கை நுண்ணறிவும், இணையமும் பெரும் வளர்ச்சியினை அடையும். இவற்றின் தேவைகளும் அதிகமாகும். கரோனோ தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் செயற்கை நுண்ணறிவின் பயன்படும், இணையம் வழியிலான தகவல் பரிமாற்றமும் பெரிய அளவில் பயன்படுத்தப்பட்டன. தகவல்களை வேகமாகப் பகிர்ந்து கொள்ளுதல், மருந்து தெளித்தல் ஆகிய பணிகளில் இவற்றின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.எனவே, இப்படிப்புகளுக்குப் பிரகாசமான எதிர்காலம் இருக்கும்.

கோவிட்-19 தொற்றுநோய் தாக்குதலுக்குப் பின் கல்வி மற்றும் தொழில் சார்ந்த துறைகள் பாதிப்பைச் சந்தித்தாலும், செயற்கை நுண்ணறிவு மற்றும் இணையம் சார்ந்த படிப்புகளுக்கான தேவையும் வேலைவாய்ப்பும் அதிகமாகவே இருக்கும். இது குறித்த உரையாடலில் பெங்களூரு தேசிய வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி மன்ற இயக்குநரும் ராணுவ விஞ்ஞானியுமான டாக்டர் வி.டில்லிபாபு, கேட்டர்பில்லர் நிறுவன பொதுமேலாளர் (செயலாக்கம், திருவள்ளூர் பிளான்ட்) என்.அன்புச்செழியன், அமிர்தா ஸ்கூல் ஆஃப் இன்ஜினியரிங் உதவிப் பேராசிரியர் டாக்டர் இ.ஏ.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்று உரையாற்ற இருக்கிறார்கள்.

2020 மே 17, ஞாயிறு) மாலை 5 முதல் 6.30 மணிவரை நடைபெறவுள்ள இந்த இணைய வழி உரையாடலில், பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வுகளை எழுதியிருக்கும் மாணவ-மாணவியர்களும், அவர்களது பெற்றோர்களும் பங்கேற்கலாம். இதில் பங்கேற்க விரும்புபவர்கள் ..

REGISTER NOW

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x