

புது வண்ணாரப்பேட்டையில் 60 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்த 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
சென்னை புதுவண்ணாரப் பேட்டை வைத்தியநாதன் பாலம் அருகே கஞ்சா விற்றுக் கொண்டிருந்த 2 பெண்களை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
விசாரணையில் அவர்கள் புது வண்ணாரப்பேட்டையை சேர்ந்த மீனா(32), தாம்பரத்தை சேர்ந்த ரேணுகா(33) என்பது தெரிந்தது. அவர்களின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் 60 கிலோ கஞ்சா பார்சல்கள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.
ஆந்திர மாநிலத்திலிருந்து ரயில் மூலம் சென்னைக்கு கஞ்சா பார்சல்களை கடத்தி வந்து சிறிய பொட்டலங்களாக போட்டு விற்பனை செய்வது விசாரணையில் தெரியவந்தது. இவர்களின் மாமியார் முக்கிய கஞ்சா வியாபாரியாக இருந்தார். அவரது வழியில் இவர்களும் கஞ்சா வியாபாரம் செய்துள்ளனர்.