Published : 02 Dec 2019 12:14 PM
Last Updated : 02 Dec 2019 12:14 PM

உங்கள் நிதி தேவைகளை பூர்த்தி செய்யும் வசதியான வழியாக அமையும் தனிநபர் கடன் வசதி

அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் பங்கேற்றவர்களில் பாதிக்கு மேற்பட்டோர், தங்கள் குடும்பத்தின் தேவை அல்லது தனிப்பட்ட தேவைக்காக கடன் வாங்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். இதற்குப் பலவித காரணங்கள் இருக்கலாம்: நிதி உலகம் டிஜிட்டல்மயமாகி இருப்பது, கடன் வாங்கும் செயல்முறையை வசதியானதாகவும் வெளிப்படையானதாகவும் ஆக்கியிருக்கிறது. ஆன்லைனில் தனிநபர் கடன்களை எளிதாகப் பெற முடிகிறது.- போனில் இருந்து விண்ணப்பித்து, சில மணி நேரங்களில் பணம் கிடைக்கிறது. இதற்கான தகுதி அம்சங்களும் எளிமையாக இருக்கின்றன.



அடிப்படையில், தனிநபர் கடன் வசதி, வேகமாக, எளிதாக கிடைக்கக்கூடிய நிதித் தீர்வாகும். நிதித் தேவைக்கான வழியாக இவை கருதப்படுகின்றன. இந்தியாவில் இவை அதிகம் நாடப்படுவதற்கான ஐந்து காரணங்களைப் பார்க்கலாம்:

1. செலவுகளுக்கான கட்டுப்பாடு இல்லாத, ஈட்டுறுதி இல்லாத தீர்வு உங்களுக்கு கிடைக்கிறது.

தனிநபர் கடன் தொடர்பாக ஈர்க்கும் அம்சங்களில் தனித்து நிற்பது, அதன் ஈட்டுறுதி இல்லாத அம்சமே ஆகும். கடன் அனுமதி பெற எந்தப் பத்திரத்தையும் அடமானம் வைக்க வேண்டாம் என்பதால், தங்கள் சொத்துக்களை அடமானம் வைக்க விரும்பாதவர்கள் அல்லது அதற்கான சொத்து இல்லாதவர்களுக்கு இது மிகவும் ஏற்றதாக அமைகிறது. மேலும், மற்ற கடன்கள் போல் அல்லாமல், தனிநபர் கடனை எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாமல், எந்தத் தேவைக்காக வேண்டுமானாலும் பயன்படுத்தப்படலாம். உடனடி நிதி வசதியை நாடும் போது, நிதியை அணுகும் வசதி மற்றும் செலவிடும் சுதந்திரம் முக்கிய அம்சங்களாக அமைகின்றன. தனிநபர் கடன் வசதி இவற்றை அளிக்கின்றது.

பஜாஜ் பின்சர்வ் பர்சனல் லோன் இதில் முக்கியமாக திகழ்கிறது. ரூ.25 லட்சம் வரை எந்த வித ஈட்டுறுதியும் இல்லாமல் கடன் வழங்கப்படுகிறது. பயணம், வெளிநாட்டு கல்வி, குடும்பத் திருமணம் அல்லது பெரிய அளவிலான முன் பணம் என எதற்கு வேண்டுமானால் இதை பயன்படுத்திக்கொள்ளலாம்.

2. எளிமையான தகுதி அம்சங்கள் உடனடி அனுமதியை சாத்தியமாக்குகின்றன.

உடனடி நிதித் தீர்வை நாடும் போது, எளிதாக அணுகும் வசதி முக்கியமாகிறது. தனிநபர் கடன் அளிப்பது போல் இந்த வசதியை வெகு சில வாய்ப்புகளே கொண்டுள்ளன. உங்கள் கடன் தகுதியை தீர்மானிக்க, நிதி சித்திரத்தை மட்டும் அடிப்படையாகக் கொள்வதால் இது சாத்தியமாகிறது. மேலும் டிஜிட்டல்மயமாக்கலால், தகவல்கள் நொடியில் கிடைக்கின்றன. கடன் வழங்கும் நிறுவனங்கள், கடன் தகுதி அம்சங்களை தானியங்கி முறையில் பரிசீலித்து, சில நிமிடங்களில் கோரிக்கையை ஏற்கலாம் அல்லது நிராகரிக்கலாம்.

பாஜாஜ் பின்சர்வ் பர்சனல் லோன் வசதியில் இது மேலும் விரைவாக நிகழ்கிறது. தாராளமான தனிநபர் கடன் தகுதியை பூர்த்தி செய்வதன் மூலம் பஜாஜ் பின்சர்வ், விண்ணபித்த 5 நிமிடங்களுக்குள் கடன் அனுமதி அளிக்கிறது.

3. குறைந்தபட்ச ஆவணத் தேவை கடன் செயல்முறையை விரைவாக்குகிறது.

கடனுக்கு விண்ணப்பிக்கும் போது, பலவகை ஆவணங்களை அளிக்க வேண்டியிருப்பது, அனுமதி வழங்கும் காலத்தை மெதுவாக்குகிறது. குறிப்பாக கடன் வழங்கும் நிறுவனம் சரிபார்க்க பல்வேறு நிலைகளை கொண்டிருக்கும் போது இது நிகழ்கிறது. ஆனால், பஜாஜ் பின்சர்வ் போன்ற தனிநபர் கடன் வசதியில், கடன் விண்ணப்ப செயலாக்கத்திற்கு அடையாள அட்டை, வருமான சான்றிதழ் மற்றும் வங்கி கணக்கு அறிக்கை ஆகிய ஆவணங்களை மட்டும் வழங்கினால் போதுமானது. இந்தக் குறைந்தபட்ச ஆவணங்கள் தேவை வேகமான சரிபார்த்தல் மற்றும் அனுமதிக்கு உதவுகிறது.

பஜாஜ் பின்சர்வின் 24 மணி நேர விநியோக உறுதி இதற்குச் சான்றாகும்.



4. உங்கள் நிதி நிலைக்கு ஏற்ப திரும்பி செலுத்தும் காலத்தை தேர்வு செய்யலாம்.

உடனடி தனிநபர் கடன் வசதி பெற, அதற்கான வட்டி விகிதம் அதிகமாக இருக்கும் என்பது தெரிந்ததுதான். இருப்பினும், தனிநபர் கடனுக்கான வட்டி விகிதம் போட்டித்தன்மை மிக்கதாக இருக்கிறது. மேலும் விருப்பமான திரும்பி செலுத்தும் கால வசதி, பட்ஜெட்டிற்கும் ஏற்றதாக அமையும். குறிப்பிட்ட கால அளவிற்கு, உங்கள் நிலைக்கு ஏற்ப, இது 60 மாதங்கள் வரை நீடிக்கக் கூடியது, மாதத் தவணையை தீர்மானிக்க முடியும் என்பதால், உடனடி நிதி தேவைப்படும் போது தனிநபர் கடன் வசதி ஏற்றதாகிறது.

5. மேலும் நிதி விருப்ப அம்சத்திற்கு பிளக்சி கடன் வாய்ப்பும் உள்ளது.

உடனடி நிதிக்காக பலரும் தனிநபர் கடனை நாடுவதற்கு மதிப்பு கூட்டப்பட்ட அம்சங்களும் காரணமாக அமைகின்றன. பிளக்சி கடன் வசதி இத்தகைய வசதிகளில் ஒன்று. இது பஜாஜ் பின்சர்வ் நிறுவனத்தால் பிரத்யேகமாக வழங்கப்படுகிறது மற்றும் அனுமதிக்கப்பட்ட தொகையில் உங்கள் தேவைக்கு ஏற்ப பகுதியாகப் பெற்று, அந்தத் தொகைக்கு மட்டும் வட்டி அளிக்க வழி செய்கிறது.

இந்த வசதி திரும்பி செலுத்தும் போதும் அளிக்கப்படுகிறது. கடனின் ஆரம்பக் காலத்தில் நீங்கள் வட்டிக்கான மாதத் தவணையை மட்டும் தேர்வு செய்யலாம். சரியாகப் பயன்படுத்துவதன் மூலம், மாதத் தவணையை 45 சதவீதம் வரை குறைக்கலாம். இதன் மூலம் உடனடித் தேவையை நிறைவேற்றிக்கொள்ளலாம்.

ஆக அவசர கடன் தேவை என்றாலும் வாழ்வியல் தேவைக்கான கடன் என்றாலும், தனிநபர் கடன் வசதியை எளிதான, ஏற்ற வசதியாக நீங்கள் கருதலாம். மேலும், நீங்கள் எப்போது வேண்டுமானாலும் ஆன்லைன் தனிநபர் கடன் வசதி அல்லது வழக்கமான தனிநபர் கடன் வசதியை நாட தீர்மானிக்கலாம் என்பதால் இதற்கான நிறுவனத்தைத் தேர்வு செய்துகொள்வது நல்லது.

மேலே விவரித்த அம்சங்களின் அடிப்படையில், பஜாஜ் பிர்ன்சர்வ் பர்சனல் லோன், ஆன்லைன் மற்றும் உடனடி தனிநபர் கடனுக்கு ஏற்றதாக அமைகிறது. அதிகாரபூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பித்து சில மணி நேரங்களில் அனுமதி பெறலாம். இதனால் நீளமான சரிபார்த்தல் செயல்முறையை தவிர்க்கலாம். ஆன்லைனில் உங்கள் முன் அனுமதி கடன் வசதியை தெரிந்து கொண்டு, உங்களுக்கு ஏற்ற ஆன்லைன் தனிநபர் கடன் வசதியை நாடுங்கள்.

இந்த கட்டுரை விளம்பரதாரரின் ஒரு பகுதியாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x