

தமிழகம் முழுவதும் 6 மாதங் களாக நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோக்களுக்கான பர்மிட் வழங்கும் முறையை, புதிய விதிமுறைகளுடன் அறிமுகப் படுத்த போக்குவரத்து ஆணையர கம் முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் மொத்தம் 2.30 லட்சம் ஆட்டோக்கள் ஓடுகின்றன. இதில் சென்னையில் மட்டுமே 74 ஆயிரம் ஆட்டோக்கள் ஓடு கின்றன. அண்டை மாநிலங்களான கர்நாடகத்தில் 1.70 லட்சம் ஆட் டோக்களும், ஆந்திரத்தில் 1.30 லட்சம் ஆட்டோக்களும், கேரளத் தில் 1 லட்சம் ஆட்டோக்களும் ஓடுகின்றன. அண்டை மாநிலங் களை ஒப்பிடும்போது தமிழகத்தில் தான் அதிக ஆட்டோக்கள் ஓடு கின்றன.
பர்மிட் கோரி வழக்கு
ஆட்டோக்களின் எண்ணிக் கையை கட்டுப்படுத்த தமிழகத் தில் உள்ள ஆர்டீஓ அலுவலகங் களில் ஆட்டோக்களுக்கு பர்மிட் வழங்குவது கடந்த டிசம்பர் மாதம் நிறுத்தப் பட்டது. இதைத் தொடர்ந்து ஆட்டோக்களுக்கு மீண்டும் பர்மிட் வழங்க வேண்டும் என்று கோரி நீதிமன்றத்தில் சிலர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்நிலையில், தகுதியானவர் களுக்கு மட்டும் ஆட்டோ பர்மிட் வழங்கும் வகையில் புதிய வழிமுறை வகுக்கப்பட்டு வருகிறது. எனவே, விரைவில் புதிய விதிமுறைகளு டன் பர்மிட் வழங்க போக்கு வரத்து ஆணையரகம் முடிவு செய்துள்ளது.
தகுதியானவர்களுக்கு மட்டும்
இதுதொடர்பாக போக்கு வரத்து ஆணையரக அதிகாரி கள் கூறும்போது, “தகுதியானவர் களுக்கு மட்டுமே ஆட்டோ பர்மிட் வழங்கும் வகையில் புதிய விதி முறைகளை உருவாக்கி வருகி றோம்.
இந்த விதிமுறைகள்படி, பர்மிட் வழங்குவது மீண்டும் விரைவில் கொண்டுவரப்படும். படித்து முடித்து விட்டு, வேலைக் காக காத்திருக்கும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் இது இருக்கும்’’ என்றனர்.
இதுதொடர்பாக தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர்கள் சம்மேளன (ஏ.ஐ.டி.யு.சி) மாநில பொதுச் செயலாளர் சேஷசயனம் கூறியபோது, ‘‘அதிக ஆட்டோக்களை வைத்தி ருக்கும் தொழிலதிபர்களுக்கு பர்மிட் வழங்காமல், ஆட்டோ தொழிலாளியை அடையாளம் கண்டு, அவர்களுக்கு மட்டுமே பர்மிட் வழங்க வேண்டும்’’ என்றார்.