இந்து தமிழ் திசை மற்றும் கோ-ஆப்டெக்ஸ் இணைந்து வழங்கும் ‘கைத்தறிக்குக் கை கொடுப்போம்..’ வாசகர்களுக்கான பண்டிகைக்கால சிறப்புப் பரிசு

இந்து தமிழ் திசை மற்றும் கோ-ஆப்டெக்ஸ் இணைந்து வழங்கும் ‘கைத்தறிக்குக் கை கொடுப்போம்..’ வாசகர்களுக்கான பண்டிகைக்கால சிறப்புப் பரிசு
Updated on
1 min read

'இந்து தமிழ் திசை’ மற்றும் ‘கோ-ஆப்டெக்ஸ்’ இணைந்து தீபாவளியை முன்னிட்டு, ‘கைத்தறிக்குக் கை கொடுப்போம்..’ எனும் கொண்டாட்டத்தின் மூலமாக பண்டிகைக் கால சிறப்புப் பரிசினை வழங்கவிருக்கிறது. கோ-ஆப்டெக்ஸில் நீங்கள் வாங்கும் ஒவ்வொரு கைத்தறி சேலையுடன் இணைக்கப்பட்டுள்ள ‘நெசவாளர் அட்டை (வீவர் கார்டு)’யையும் சேர்த்துப் பிடித்தபடி, உங்கள் மொபைல் போனில் ஒரு செல்ஃபி படம் எடுங்கள். நீங்கள் எடுத்த செல்ஃபி படத்தை, உங்கள் பெயர் மற்றும் முகவரியுடன் சேர்த்து, 9940699402 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு அல்லது contesttamil@hindutamil.co.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். சிறப்பான செல்ஃ பி படத்தினை அனுப்பும் முதல் 500 பெண் வாசகர்களுக்கு தலா ரூ.500 மதிப்புள்ள பரிசுக் கூப்பன் வழங்கப்படும். பரிசுக் கூப்பனைப் பெற ‘கோ-ஆப்டெக்ஸ்சில்’ சேலை வாங்கிய ரசீதினை (cash bill) அவசியம் கொண்டுவர வேண்டும். செல்ஃபி படங்களை அனுப்ப வேண்டிய கடைசி நாள்: 27.10.2019. நிபந்தனைகளுக்கு உட்பட்டது’

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in