Published : 18 Jul 2015 05:18 PM
Last Updated : 18 Jul 2015 05:18 PM

உலகெங்கும் இந்திய பெரு, சிறு முதலாளிகள்: ராமா

கட்டுரை:>காலனியாதிக்கத்தின் புதிய முகங்கள்!

தி இந்து ஆன்லைன் வாசகர் டி.ராமா கருத்து:

காலனி ஆதிக்கம் பன்னாட்டு முதலாளித்துவம் பற்றி பேசும் தோழர்கள் "இந்தியாவை இந்திய முதலாளிகள் சுரண்டுகிறார்கள்" என்று வேண்டுமானால் பேசலாம். ஆனால் இந்தியா அயல்நாட்டு முதலாளிகளால் அடக்கி ஆளப் படுகிறதென்று சொல்வது முழுப் பூசணியை சோற்றில் மறைப்பதாகும்.

இப்போது இந்திய பெரு, சிறு முதலாளிகள் உலகெங்கும் பறந்து பெருகுகின்றனர். ஒரு உதாரணம்: இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பாவின் எக்கு (Steel) முழுவதும் லக்ஷ்மி மிட்டல்--டாடா நிறுவனங்கள் கையில். பல அமரிக்க நிலக்கரிச் சுரங்கங்கள் உட்பட! பட்டியல் சொல்லி அடங்கா. மேலும், அவற்றை விற்ற அயல்நாட்டார் பெயரிலேயே பல நிறுவனங்கள் நடப்பதால், யார் சொந்தக்காரர் என்று சில வேளைகளில் சொல்ல முடியாது.

'ஆங்கில-அமெரிக்க ஏகாதிபத்தியம்' ஒழிக என்பதற்கு பதிலாக 'இந்திய ஏகாதிபத்தியம்' ஒழிக என்று வெள்ளைக்காரர்கள் குரல் எழுப்பினால், இந்திய ஏழை-நடுத்தர மக்கள் எதிர்ப்பார்களா, அல்லது தேசபக்தியில் மெய் மறந்து மகிழ்வார்களா?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x