Published : 18 Jul 2015 05:08 PM
Last Updated : 18 Jul 2015 05:08 PM

வாகன உற்பத்தியை கட்டுப்படுத்தவும்: தணிகாசலம்

செய்தி:>ஹெல்மெட் அணியாத பெண் காவலர் மீது நடவடிக்கை: போக்குவரத்து காவல்துறைக்கு ஃபேஸ்புக்கில் குவிந்த பாராட்டு

'தி இந்து' ஆன்லைன் வாசகர் மு.தணிகாசலம் கருத்து:

சராசரியாக தமிழ் நாட்டில் அமைக்கப்பட்டுள்ள சாலைகளுக்கு ஏற்ப இருசக்கர வாகன உற்பத்தியை கட்டுப்படுத்தவும் இருசக்கர வாகனங்களின் வேகத்தை முறைப்படுத்தவும் நடுவணரசும் மாநில அரசும் கூட்டாக சேர்ந்து தவறி விட்டன.

விபத்துக்கள் அதிகம் நிகழக் காரணம் புற்றீசல்கள் போல கட்டுப்பாடு என்பதே கடுகளவும் இல்லாமல் பெருகிவிட்ட இருசக்கர வாகன உற்பத்தியே. ஒன்று சாலைகளை அகலப்படுத்த வேண்டும் அல்லது வாகன உற்பத்தியை அதி தீவிர கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.

இப்படியே போனால், சரியான தீர்வு காணப்படாவிட்டால் நிர்வாக ஒவ்வாமை உண்டாகும். எதிர்பாராத நிகழ்வுகள் ஏற்ப்படக் கூடும். அப்போதுவீசும் காற்றில் குப்பையில் கிடக்கும் இலை கோபுர உச்சிக்கு போகும். உச்சியில் உள்ள கலசங்கள் குப்பைசேரும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x