Published : 18 Jul 2015 05:17 PM
Last Updated : 18 Jul 2015 05:17 PM

ஒருவரை ஒருவர் மிஞ்சுவர் ஊழலில்: செந்தில்

செய்தி:>மின் வாரியத்தில் ஒரு லட்சம் கோடி நஷ்டத்திற்கு அமைச்சரின் பதில் என்ன? - ஸ்டாலின் கேள்வி

'தி இந்து' ஆன்லைன் வாசகர் செந்தில் கருத்து:

என்னதான் மக்கள் செல்வாக்கில் வெற்றி பெற்று இரு கழகங்களும் மாறி மாறி ஆட்சியில் இருந்தாலும் திறமையற்ற ஊழலான நிர்வாகத்தில் எப்படி லாபம் ஈட்ட முடியும். மின்சார திருட்டிலும், டிரான்ஸ்மிசன் லாஸிலுமே கிட்டத்தட்ட 23% மின்சாரம் பயனற்று போகிறது.

மேலும் பராமரிப்பு இன்மை, நிலகரி வாங்குவதில் ஊழல், தனியார் மின்சாரம் வாங்குவதில் ஊழல் என்று எங்கும் ஊழல் எதிலும் ஊழல் பிறகு எப்படி லாபம் வரும் இந்த நட்டம் வருடா வருடம் ஏறிகொண்டிருக்கும். சரி இந்த இரு கட்சிகளை விட்டால் வேறு நல்ல கட்சிகள் இருக்கிறதா என்றால் இருப்பவர் எல்லாம் ஒருவரை ஒருவர் மிஞ்சுவர் ஊழலில்.

அதிலும் ஊழலின் விரோதி, வளர்ச்சியின் நாயகன் என்று முக மூ(மோ)டி போட்டு அறுவடை செய்தவரது கட்சியின் ஊழலோ மிக மிக அதிகம். உலகமே வியாபாரிகளின் கைகளில் அவர்களது அகோரபசிக்கு முன் எதுவும் எடுபடாது. இந்த முதலாளித் துவ சூழலில் வேறு என்ன எதிர்பார்க்க முடியும் ஊழலை தவிர.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x