Published : 20 Jul 2015 05:59 PM
Last Updated : 20 Jul 2015 05:59 PM

வாகனங்களின் வேகத்தைக் குறைக்கவும்: அந்தோணிமுத்து

செய்தி:>காற்றில் பறக்கும் விதிகள்; அதிவேகத்தால் அதிகரிக்கும் விபத்துகள்: 4 ஆண்டுகளில் தமிழகத்தில் 23,700 பேர் பலி

'தி இந்து' ஆன்லைன் வாசகர் அந்தோணிமுத்து கருத்து:

என்னதான் அறிவுரை கூறினாலும் யாரும் கேட்பதில்லை. பொருளாதார வளர்ச்ச்சி என்ற பெயரில் எக்கச்சக்கமாக வாகனங்களை உற்பத்தி செய்து கொண்டு வருகிறோம். அளவுக்கு அதிகமா கார்கள், பைக்குகள். கனரக வாகனங்கள் ஒட்டுனர்கட்கு பொறுமை இருப்பதில்லை.

குறிப்பாக, உள்ளூர் கனரக வண்டிகள் அதி வேகத்தில் ஒட்டப்படுகின்றன. வாகனங்களின் வேகத்தைக் கண்காணித்து அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க போதுமான காவலர்கள் இல்லை. குறிப்பாக கட்டுமானப் பொருட்களை ஏற்றி வரும் டிப்பர் போன்ற லாரிகள் கண்மூடித்தனமாக ஓட்டப்படுவதைக் காண்கிறோம்.

ஆக்கப்பூர்வ நடவடிக்கைகள் எதுவும் எடுத்ததாகத் தெரியவில்லை. பயணிகள் செல்லும் வண்டிகளைக் குறைக்க பஸ் வசதிகள் அதிகமாக்கப்படவில்லை. எந்த அளவுக்கு கார்களும், பைக்குகளும் உற்பத்தி ஆகின்றனவோ அந்த அளவுக்கு பொது மக்கள் பயணிக்க பஸ்கள் உற்பத்தி செய்யப்படவில்லை.

இது ஒரு சரியான ஆரோக்கியமான பொருளாதார வளர்ச்சி இல்லை. இந்த ஒரு நெறியற்ற பொருளாதார வளர்ச்சிக்கு அநேக மனித உயிர்கள் பலி. மனிதர்கள் மட்டுமா? மற்ற உயிரினங்களும் கூட.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x