Published : 02 Jul 2015 05:06 PM
Last Updated : 02 Jul 2015 05:06 PM

எல்லா வசதிகளோடும் புதிய நகரம் அவசியம்: மீனாள்

தலையங்கம்:>அதிநவீன நகரங்களும் கூவம்வாசிகளும்!

'தி இந்து' ஆன்லைன் வாசகர் மீனாள் கருத்து:

புதிதாக நகர்புறமாக்கல் அமைப்பவர்களுக்கு எளிதாக இருக்கலாம். எடுத்துக்காட்டாக ஏற்கெனவே இருக்கும் நகரங்களில் கழிவுநீர் சாக்கடைகள் அமைக்க வழியில்லை. சாலைகளை அகலப்படுத்தவும் வழியில்லை. இவற்றிக்காக ஏற்கெனவே கட்டப்பட்டிருக்கும் கட்டடங்களை இடித்தால் வரிந்துக்கட்டிக் கொண்டு வருவர், வீட்டின் உரிமையாளர்கள்.

எனவே, இது போன்று எல்லா வசதிகளும் நிறைந்த ஒரு நகரை உருவாக்குவது அவசியமாகிறது. அதில் எல்லாத் தரப்பினருக்கும் வீடுகள் அளிக்கப்பட வேண்டும். எல்லா அடிப்படை வசதிகளுமிருக்க வேணடும். மருத்துவமனை, போக்குவரத்து, காற்றோட்டமான வீடுகள், மத வேறுபாடின்றி வழிபடுமிடங்கள், பள்ளிகள் , கல்விச்சாலைகள், கடைகள், கடைத்தொகுதிகள் என் எல்லா வசதிகளுடன் பாதுகாப்பு வசதிகளுமிருக்க வேண்டும்.

முக்கியமாக கழிவு நீர் வெளியேற பாதாள சாக்கடைகள் இருப்பது உறுதி செய்யப்பட வேண்டும். பழைய நகர்களில் விஐ போன்ற மாற்றங்கள் செய்ய பொதுமக்கள் அரசாங்கத்திற்குக் கைகொடுத்து உதவ வேண்டும். புதிய நகர்களில் ஏழைகளுக்கு ஏற்ற ஓரறை, ஈரறை வீடுகள் கட்டித்தரலாம். அவர்களது வாழ்வும் மேம்படும்.

வறியவர்களின் தற்போதைய நிலையை நாம் சற்று கவனித்துப் பார்த்தல் அவசியம். தமிழ் நாட்டில் அரசு மரத்தடிகளில் வாழும் சிலருக்கு வாழ்வளிக்கக் கொடுத்த வீடுகளை, அக்கூட்டத்தினர் வாடகைக்கு விட்டுவிட்டு மரத்தடிகளிலே வாழ்கின்றனர். இப்படி நடைபெறமால் பார்த்துக் கொள்ள வேண்டும்.

கிராமப் புறங்களில் காய்தி கண்ட ஸ்தல சுய ஆட்சி ஏற்பட வேண்டும். நாட்டின் எல்லாப்பகுதிகளும் வளம் பெறும், அத்துடன் நகரங்களில் மக்கள் தொகை அதிகரிப்பதும் தடைப்படும். கிராமங்களில் பிழைப்புக்கு வாய்ப்பு இருந்தால் நகர்புறங்களை நோக்கி ஓட வேண்டாமே?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x