எண்ணென்ப... கருப்பின மக்களின் துயரம்!

எண்ணென்ப... கருப்பின மக்களின் துயரம்!
Updated on
1 min read

238

அமெரிக்காவில் இந்த ஆண்டு போலீஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டவர்களில், சம்பவத்தின்போது கையில் ஆயுதம் வைத்திராத கருப்பின மக்களின் சதவீதம். போலீஸாரால் கொல்லப்பட்ட வெள்ளையினத்தவர்களின் எண்ணிக்கையை விட (15%) இது இரண்டு மடங்கு.

13 %

அமெரிக்காவில் கடந்த ஆண்டு மட்டும், போலீஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட கருப்பின மக்களின் எண்ணிக்கை. 2001 செப்டம்பர் 11-ல் உலக வர்த்தக மையத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்த கருப்பினத்தவர்களின் எண்ணிக்கையைவிட (215) இது அதிகம்.

27 %

இந்த ஆண்டு போலீஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டவர்களில் மனநிலை பாதிக்கப்பட்டவர்களின் சதவீதம்.

2180

2012-ல் எஃப்.பி.ஐ. வெளியிட்ட அறிக்கையின்படி, கருப்பினத்தவர்களுக்கு எதிராக நடந்த இனவெறிக் குற்றங்களின் எண்ணிக்கை.

12

வயதுள்ள சிறுவன் முதல், 65 வயதான முதியவர் வரை போலீஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட கருப்பினத்தவர்களில் அடங்குவார்கள்.

13 %

அமெரிக்க மக்கள் தொகையில் கருப்பினத்தவர்களின் சதவீதம். ஆனால், போலீஸாரின் தாக்குதல்கள், இனவெறித் தாக்குதல்களில் பாதிப்புக்குள்ளாகும் கருப்பினத்தவர்களின் சதவீதம் மிக மிக அதிகம்.

10

லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் இந்த ஆண்டு மட்டும் போலீஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை. மற்ற மாகாணங்களைவிட இது மிக அதிகம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in