

125%
கடந்த 23 ஆண்டுகளில் இந்தியாவில் அதிகரித்திருக்கும் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை. உலக அளவில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை 45% ஆக உயர்ந்திருக்கும் நிலையில், இந்தியாவில் நீரிழிவு நோய் பல மடங்கு அதிகரித்திருப்பதற்கு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியும் அதைச் சார்ந்த உணவுப் பழக்கங்களும்தான் காரணம் என்று தெரியவருகிறது.
2
வகையான நீரிழிவு நோய்கள் இருக்கின்றன. தேவையான அளவுக்கு இன்சுலின் சுரக்காததால் ஏற்படுவது ஒரு வகை. சுரந்த இன்சுலின் சரியாகப் பயன்படுத்தப்படாமல் போவதால் ஏற்படுவது மற்றொரு வகை. கர்ப்பிணிகளுக்கும் சில சமயம் நீரிழிவு நோய் ஏற்படுவது உண்டு.
15 லட்சம் முதல் 49 லட்சம்
2012 முதல் கடந்த ஆண்டு வரை எடுக்கப்பட்ட கணக்கீட்டின்படி, ஒவ்வொரு ஆண்டும், நீரிழிவு நோய் பாதிப்புகளால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை.
2 - 4%
பெண்களுக்குக் கர்ப்பகாலத்தின்போது நீரிழிவு நோய் ஏற்படுகிறது. குழந்தை பிறந்தவுடன் இது மறைந்துவிடும் என்றாலும், எதிர்காலத்தில் தாய்க்கோ அல்லது சேய்க்கோ நீரிழிவு நோய் திரும்பவும் வருவதற்கு வாய்ப்பு உண்டு.
59.2
கோடி, உலகமெங்கும் வரும் 2035-ம் ஆண்டுக்குள் உயரும் என்று கணக்கிடப் பட்டிருக்கும் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை.
39.22
லட்சம் கோடி ரூபாய், கடந்த ஆண்டு மட்டும் நீரிழிவு நோய் தொடர்பாக உலக அளவில் செலவழிக்கப்பட்ட தொகை. அமெரிக்காவில் மட்டும் 15.70 லட்சம் கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டிருக்கிறது.
30%
நீரிழிவு நோய் இல்லாதவர்களை ஒப்பிட, நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் ஆயுள் குறைவின் சதவீதம்.
139%
ஆண்களில் நீரிழிவு நோய் பாதிப்பு அதிகரித்திருக்கும் சதவீதம். பெண்களில் 109% நீரிழிவு பாதிப்பு அதிகரித்திருக்கிறது.