Published : 06 Jun 2015 06:08 PM
Last Updated : 06 Jun 2015 06:08 PM

மொழி அறிவுக்கு ஐந்தாறு மாதங்கள் போதும்: ரகு

செய்தி:>ஆசிரியர்களின் கூட்டு முயற்சி: கிராமத்தில் நவீன வசதிகளுடன் இயங்கும் அரசுப் பள்ளி

'தி இந்து' ஆன்லைன் வாசகர் ரகு கருத்து:

ஆங்கிலம் என்பது ஒரு மொழியறிவு தான் என்பது புரிவதில்லை. அதை ஒரு மொழிப் பாடமாக படித்தாலே போதுமானது. எதற்கு அனைத்துப் பாடங்களையும் ஆங்கிலத்தில் படிக்க வேண்டும். உயர்க்கல்விக்கு ஆங்கிலமே சிறந்தது. அனால் அடிப்படைக் கல்வியான பள்ளிக் கல்விக்குக் தாய்மொழி தான் சிறந்ததென்று உலகம் முழுவதும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

பள்ளிக் கல்வி முடித்து கல்லூரி செல்லும் முன்னரே மாணவர்களுக்குப் போதுமான ஆங்கில அறிவு பெறும்படி செய்ய நமது கல்வித் திட்டத்தில் மாற்றம் கொண்டு வருவதுடன் ஆசிரியர்களுக்கும் மொழியை நன்றாக கற்றுத் தருவதற்கு பயிற்சியளிக்க வேண்டும்.

ஆங்கிலவழிக் கல்வி அவசியமற்றது என்பதற்கு நானே சிறந்த எடுத்துக்காட்டு: சிறு நகரத்தில் உள்ள அரசு பள்ளியில் தமிழ்வழியில் பயின்ற நான், இப்பொழுது சாப்ட்வேர் நிறுவனத்தில் அமெரிக்கர்களிடம் பேசும் வேலை செய்கிறேன். என்னை போல எண்ணற்றவர்கள் சிறிய ஊர்களில் தமிழ்வழியில் படித்து சாப்ட்வேர் துறையில் பணிபுரிகின்றனர்.

இன்று ஆங்கிலவழிக்கு வரிந்துக்கட்டிக் கொண்டு ஆதரவளிக்கும் அனைவரும் தமிழ்வழியில் பயின்று ஆங்கிலத்தை சரியாக பேச முடியவில்லையென தாழ்வு மனப்பான்மை கொண்டவர்களே. ஒரு மொழியில் முழுமையான அறிவு பெற ஆறு மாதங்கள் முதல் ஒரு வருடமே போதுமானது.

ஆனால் பல வருடங்கள் படித்தும் ஆங்கில அறிவு வரவில்லை என்றால், அது நமது கல்வி முறை (அ) ஆசிரியரின் திறமையின்மை (அ) மாணவரின் திறமையின்மையோ தான் காரணமே தவிர. குறைபாடு தமிழ்வழிக் கல்வியில் இல்லை. இன்று கல்வி வியாபாரமாகி, மதிப்பெண் ஒன்றே குறிக்கோள் ஆகிவிட்ட நிலையில், 80% மாணவர்கள் ஆங்கிலவழியில் தான் பயிலுகின்றனர். கொஞ்சநஞ்சம் தமிழ்

கற்று தரும் அரசு பள்ளிகளையும் ஆங்கிலவழிக்கு மாற்றிவிட்டால் பாரதி சொன்னது போல தமிழ் இனி மெல்லச் சாகும். அரசுப் பள்ளிக்கு ஆதரவளிக்கும் இந்து நாளிதழ் தமிழ்வழிக் கல்விக்கும் ஆதரவளிக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x