Last Updated : 30 May, 2014 05:50 PM

 

Published : 30 May 2014 05:50 PM
Last Updated : 30 May 2014 05:50 PM

மகிழ்வான வாழ்வுக்கு உகந்தது சைக்கிள் பயணமே!

ஆட்டோ, பஸ், ரயில்... இந்த வாகனங்களில் எதில் நீங்கள் பயணிக்க விரும்புவீர்கள்?

இந்த வார இறுதியில் இவையனைத்தையும் மறந்துவிட்டு, சைக்கிளில் பயணம் செய்து பாருங்கள். உங்கள் மகிழ்ச்சியின் அளவு பலமடங்கு உயர்ந்திருப்பதாக உணருவீர்கள்.

ஆம்! நாம் பயணிக்கும்போது, மகிழ்ச்சி, வேதனை, மனஅழுத்தம், சோகம், சோர்வு போன்ற உணர்வுகளின் அளவு எப்படி மாறுப்படுகிறது என்று அமெரிக்க ஆய்வாளர்கள் கண்டறிய முயற்சித்தனர். மேலும், நாம் எதில் பயணித்தால் இந்த உணர்வுகளின் அளவு எப்படியெல்லாம் மாறுப்படுகிறது என்றும் ஆராய்ந்தனர். இதில், நாம் சைக்கிளில் பயணிக்கும்போது, நமது மகிழ்ச்சியின் அளவு அதிகரிப்பதாக கண்டறிந்துள்ளனர்.

“மற்ற வாகனங்களில் விடவும் சைக்கிளில் பயணிக்கும்போது, மக்கள் மிகவும் மகிழ்ச்சிகரமாக இருக்கிறார்கள்”, என்று க்ளெம்சன் பல்கலைக்கழகத் துணைப் பேராசிரியர் ஈரிக் மொர்ரிஸ் தெரிவித்தார்.

மேலும், சைக்கிள் ஓட்டுபவர்கள் பெரும்பாலும் தாங்களாக முன்வந்து பயணிக்க விரும்புபவர்களே. இதுகுறித்து மோர்ரிஸ் கூறுகையில், “மகிழ்ச்சியானவர்களின் குணாதிசயங்கள் கொண்டவர்களான இளைஞர்களும் உடல்ரீதியில் ஆரோக்கியமாக உள்ளவர்களும் சைக்கிள் ஓட்டுபவர்களாக உள்ளனர்”, என்று தெரிவித்தார். சைக்கிளுக்கு அடுத்து, காரில் பயணிப்பவர்களும், கார் ஓட்டுபவர்களும் மகிழ்ச்சியாக உள்ளனர். பஸ் மற்றும் ரயிலில் பயணிப்பவர்களுக்கு அதிகமாக எதிர்மறையான உணர்வுகள் ஏற்படுவதாக ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

“நம் பயணத்திற்கும், நம் உணர்விற்கும் உள்ள தொடர்பு குறித்து ஆராய்வதற்கான காரணம், வாகன சேவை வசதியை மேம்படுத்தவும், வாகனங்களில் முதலீடு செய்யவும், அதற்கான விலைநிலவரங்களை நிர்ணிக்கவும், பயணம் செய்வதால் ஏற்படும் நன்மைகளை அறிந்துக்கொள்ளவும் உதவிகரமாக இருக்கும்", என்கிறார் மோர்ரிஸ்.

இந்த ஆய்வு முடிவு, “ட்ரான்ஸ்போர்டேஷன்” என்ற இதழில் வெளியாகியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x