Published : 06 Jun 2015 06:08 PM
Last Updated : 06 Jun 2015 06:08 PM

மெல்லிசை மன்னர்களின் சிரஞ்சீத்துவ படம்: வடுவூரான்

கட்டுரை:>எங்க வீட்டுப் பிள்ளை 50 ஆண்டுகள் நிறைவு: மறுபடியும் முதல்லேருந்தா?

'தி இந்து' ஆன்லைன் வாசகர் வடுவூரான் கருத்து:

எம்ஜிஆர் படங்களிலேயே ஒரு 'கல்ட் கிளாஸிக்' என்ற அந்தஸ்தை பெற்ற ஒரே படம் எங்க வீட்டு பிள்ளை! இதில் ரத்னா என்கிற அந்த இரண்டாவது கதாநாயகி எனக்குத் தெரிந்து இரண்டே படங்களில்தான் வந்து பிறகு காணமல் போனார் (இன்னொரு படம் தேவரின் 'தொழிலாளி'. அதிலும் இரண்டு கதாநாயகிகள்!) "கண்களும் காவடி சிந்தாகட்டும்" என்ற பாட்டும் அவ்வளவு சோபிக்கவில்லை. எல்லாவற்றையும் ஒரே அமுக்காக அமுக்கியது வாலியின் "நான் ஆணையிட்டால்" பாடல்.

ஓரிரண்டு வருடங்களுக்குப் பின்னர் சத்யா மூவீஸ் பேனரில் 'தெய்வத் தாய்க்கு அடுத்து வந்த சொந்தப் படத்துக்கு எம்ஜிஆர் "நான் ஆணையிட்டால்.." என்று பெயர் வைக்கும் அளவு அந்த பாட்டின் முதலடி பலரை வசீகரித்தது. (அந்த 'நான் ஆணையிட்டால்' படத்துக்கும் சாணக்கியா தான் இயக்குனர் என்று நினவு!). வின்சென்ட் தான் காமிராமேன் என்று நினைக்கிறேன்.

கருப்பு சட்டை போட்ட மக்கள் திலகம் சிவப்பு கார்பெட்டின் மீது சாட்டையுடன் சாய்ந்து படுக்கும்போது ஒரு லோ ஆங்கிள் ஷாட்டில் திமுக கொடியின் இரட்டை வண்ணங்கள் பளிச்சிடும்போது கொட்டகையின் மேற்கூரை ஆரவாரத்தில் எகிறும்! முதலில் தெலுங்கில் ராமுடு பீமுடு என்று என்டிஆர் ஜமுனா எல்.விஜயலட்சுமி நடித்து சாணக்யா இயக்கத்தில் ராமா நாயிடு தயாரிப்பில் வந்த படத்தின் தமிழ் ரீமேக் தான் இந்தப் படம்.

சென்னையில் காசினோ, மேகலா, பிராட்வே 3 தியட்டர்களிலும் வெள்ளிவிழா கொண்டாடியது ஒரு ஆக்க்ஷன் ஹீரோ என்று அறியப்பட்ட எம்ஜிஆர் வில்லன்களிடம் உதை வாங்கும் ஒரு பயந்தாங்கொள்ளியாக முதல் முறையாக தோன்றியது படத்தின் இன்னொரு சிறப்பம்சம். படத்தில் சாட்டையை சுற்றியது போலவே திரைக்கு பின்னால் சாட்டையை சுற்றினாரோ என்னவோ தெரியாது இந்த படத்துக்கு மெல்லிசை மன்னர்கள் இசையமைத்த பெரும்பான்மை பாடல்கள் சிரஞ்சீவித்துவம் பெற்றன.

ரீமேக் செய்த அத்தனை மொழிகளிலும் வசூலை வாரிக் குவித்தது. இதே தயாரிப்பாளர்கள் நௌஷாத் இசையில் திலிப்குமார்-மும்தாஜ்- சைரா பானு நடிக்க ஹிந்தியில் ராம் அவுர் ஷ்யாம் எடுத்ததில் அதுவும் சில்வர் ஜூப்ளி கொண்டாடியது. மலையாளிகளும் தங்கள் பங்குக்கு அஜயனும் விஜயனும் என்ற பெயரில் எடுத்து அதுவும் ஹிட்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x