Published : 14 May 2015 05:05 PM
Last Updated : 14 May 2015 05:05 PM

பிறகு ஏன் வௌவால்போல் வாழ்க்கை: செல்வன்

செய்தி:>நானும் தமிழ் பேசுவேன்.. என்னிடம் தமிழிலேயே பேசுங்கள்...- அசத்தும் அமெரிக்கா ஆராய்ச்சி மாணவி ஆண்ட்ரியா

'தி இந்து' ஆன்லைன் வாசகர் செல்வன் கருத்து:

வாழ்த்துக்கள்! நம்ப நட நம்பி நடவாதே ! இலங்கையனாகிய என் நண்பர் தமிழகத்துக்கு முதன்முறை வந்து சவர்க்காரம் வாங்க கடைக்கு சென்றபோது கடைக்காரர் "சோப்புன்னு தமிழ்ல கேளுப்பா" என்று கூறியதாக கூறிய போது முதலில் சிரிப்பும் பின் தாய்மொழியின் தேய்வையும் நினைத்து கவலையும் அடைந்தேன்! தமிழராய் பிறந்த நாம் ஏன் தமிழ் பேச வெட்கப்பட வேண்டும்?

இங்கு நாம் பிழைப்புக்காக ஆங்கிலக்கல்வி பயின்றாலும் எம் பெற்றோரும் தாத்தா பாட்டிகளும் நான்றாகவே தமிழ் எழுத படிக்க பேச கற்றுத் தருகின்றனர்.. நாமும் எம் பிள்ளைகளுக்கு இதுவே செய்கிறோம்.. நாம் வெள்ளைக்காரப் பெயர் வைத்து நுனிநாக்கில் ஆங்கிலம் பேசினாலும் வெள்ளைக்காரன் நம்மை இந்திய அல்லது இந்திய வழிதோன்றல் என்றே கணிப்பான்! பிறகு ஏன் வௌவால் போல ரெண்டும்கெட்டான் வாழ்க்கை?

கொழும்பு விமான நிலையம் அருகிலுள்ள நீர்கொழும்பு நகரம் சென்ற நூற்றாண்டு ஆரம்பத்தில் தமிழ் கத்தோலிக்கரை 95 வீதம் கொண்ட பெருநகர். இன்று வாரிசுகள் 90 வீத சிங்களவர். மொழி பிறழ்ந்தால் இன்னும் சில நூறு ஆண்டுகளில் மலையாளி தெலுங்கர் போல் நாம் யாரோ நீங்கள் யாரோ? ஆகவே தமிழால் இணைவோம் தமிழைக் காப்போம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x