Published : 16 May 2015 05:07 PM
Last Updated : 16 May 2015 05:07 PM

கலைஞரிடத்தில் பிடித்ததும் பிடிக்காததும்: ஜெயசரவணன்

தொடர்:>ட்வீட்டாம்லேட்: கருணாநிதியை இவங்களுக்கு ஏன் பிடிக்கும்?

'தி இந்து' ஆன்லைன் வாசகர் ஜெயசரவணன் கருத்து:

எனக்கு இவரிடம் பிடிச்சது: இந்த 92 வயதில் சக்கர நாற்காலியில் அமர்ந்து கொண்டே பல விமர்சனங்களையும் தாண்டி, அன்றைய ராஜாஜி முதல் இன்றைய சீமான் வரை கருத்து வேறுபாட்டில் அரசியல் நடத்துவது. இன்றும் தொடர்ந்து எழுத்து பணியில் இருப்பது.

50,60 வருடங்களுக்கு முன்பு நடந்தவைகளை கொஞ்சம் கூட மறதி இல்லாமல் பேசி தொண்டர்களை உணர்ச்சிவசப்பட வைப்பதும், ஊக்குவிப்பதும் இவருக்கு கைவந்த கலை. இவரை விமர்சனம் செய்தவர் கூட அடுத்த நாளே இவரை எளிதில் பார்த்துவிடலாம். தி.மு.க.இன்னும் ஒரு கட்டுக்குள் இருக்க காரணமே இவருடையே அணுகுமுறையே.

இவரிடம் பிடிக்காதது: குடும்ப உறுப்பினர்களால் கோஷ்டிகளை வளரவிட்டது. 62 வயது ஸ்டாலினை இன்னமும் இளைஞர் அணி செயலாளர் பதவியில் நீடிக்க விடுவது. தேர்தலில் ஒருவருக்கே பலமுறை வாய்ப்பளித்து கீழ்மட்ட தொண்டர்களை வளர விடாமல் தடுப்பது.

அ.தி.மு.க.வை போல் இல்லாமல் இன்னமும் 60 ஆண்டுகள் பழமை வாய்ந்த கட்சியை, தனித்து போட்டியிடும்அளவிற்கு கொண்டு போக முடியாமல், கூட்டணியை எதிர்பார்க்கும் அளவிற்கு கட்சியை பலவீனப்படுத்தியது. மொத்தத்தில் கலைஞர் இல்லாத அரசியல் களம் ஒரு பாலைவனம் போன்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x