Published : 02 Apr 2015 05:48 PM
Last Updated : 02 Apr 2015 05:48 PM

எல்லை தாண்டி போய் மாடு மேய்க்கலாமா? - செ

செய்தி:>வங்கதேசத்துக்கு கால்நடைகள் கடத்தப்படுவதை தடுக்க வேண்டும்: ராஜ்நாத்

'தி இந்து' ஆன்லைன் வாசகர் செ கருத்து:

ஏலே, மாடசாமி, நம்ம ஈனாக்கடாரிகலெ தொழுவத்துலே இழுத்துப் புடிச்சி கெட்டிப்பொடுலெ. கிடாக்கனுகலெ தேடி இந்தக் கடாரி எல்லாம் இந்தியாவோட எல்லையத் தாண்டி பங்களா நாட்டுக்குள்ளே படஎடுக்குதாம்லே. மந்தெ மாடுகளே அடிமாட்டு சந்தைக்கு ஆளாளுக்கு தேடித்தேடி எல்லே தாண்டி அவனுக ராணுவம் நம்ம நாட்டுக்குள்ளே வருதாமுலே.

செனெயெருமெ சொன்னாலும் கேக்காமே நடந்தே போயி நாலு லிட்டரு பாலே அந்த நாட்டுலே போயி கொட்டிக் கரக்குதாம்லே.

நாட்டெ மேய்க்க அய்யாமாருக்கு துப்பில்லேலே. மாடுமேய்க்க மவராசனுக மந்திரி ஆயிட்டாங்கலெ. அடுத்த நாட்டுக்காரனொடெ சண்டெ போடா ஒருகாரனமும் இல்லேனா, ஒன்னு கோமியம் குடி, அதெ ஆபீசெல்லாம் தெளின்னு அந்த மேனகா ஆத்தா அரட்டுது. இல்லேன கால்னடெயெ எவனோ கசாப்புக்கடைக்கு கடத்துரான்னு உள்தொரே அழுது ஒளருராறு.

நம்மாளு என்னான்னா ஆவின் பாலுலே கொளத்துத் தண்ணியே கலந்து கோடீசுவரனாயிட்டான். ஒரு குத்துமதிப்பா சொல்லுதேம்லே, கேட்டுக்கோ, நம்ம நாடு முழுசும் ஒரே கால்நடையா கத்துதுலே. காத்து சவ்வு கிழியுதுலே.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x