Published : 29 Apr 2015 06:19 PM
Last Updated : 29 Apr 2015 06:19 PM

ஒருநாள் வாடகை 7000 ரூபாயா? - மனோகர்

செய்தி:>நாள் வாடகை ரூ.7000: மே 8-க்குள் நட்சத்திர ஓட்டலை காலி செய்ய எம்.பி.க்களுக்கு உத்தரவு

'தி இந்து' ஆன்லைன் வாசகர் மனோகர் கருத்து:

உலக மக்கள் தொகையில் இந்தியாவின் பங்கு 17.5%. ஆனால் உலக வறுமையில் வாடும் மக்களில் 20.6% இந்தியாவில் உள்ளனர் (World Bank ). ஆனால் ஒருவருக்கு 32 ரூபாய் இருந்தால் அவர் வறுமையில் இல்லை என்கிறது நமது அறிவார்ந்த பொருளாதார நிபுணர்கள்.

ஆனால் சிந்திக்க தெரியாத நம் இந்திய மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஊழல் பிரதிநிதிகள் இருக்கும் அறைக்கு மட்டும் ஒரு நாள் வாடகை 7,000 ரூபாய்? இது அநியாயம். இதுவும் போக லட்சக்கணக்கில் சம்பளம், மற்ற சலுகைகள், ஐந்தே வருடத்துக்கு பின்பு வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியம்.

ஆனால் வறுமையில் வாடும் மக்களுக்கு, இப்படிப்பட்ட ஊழல் பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்த பாவப்பட்ட மக்களுக்கு எல்லா வகையான மானியத்தையும் குறைக்கிறது இந்த அரசு. என்ன கொடுமை. இந்திய அரசியல்வாதிகள் இந்தியமக்களுக்கு செய்யும் அநியாயத்தையும் ஊழலையும் பார்க்கும் போது பிரிட்டிஷ் காரர்கள் தேவலாம் போல் தோன்றுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x