Published : 13 Mar 2015 07:35 PM
Last Updated : 13 Mar 2015 07:35 PM

சாதிக் கொலைகளும் பின்னணியும்- டி.கே.நிதி

செய்தி:>நெல்லை, தூத்துக்குடியில் 10 மாதங்களில் 75 கொலைகள்: ஜாதி வெறிக்கு 25 பேர் பலி

'தி இந்து' ஆன்லைன் வாசகர் டி.கே.நிதி கருத்து:

எம்ஜியாரின் ஆட்சி காலத்தில் நிகழ்ந்த புளியங்குடிக் கலவரத்தில், ஒரு குறிப்பிட்ட சாதியினரின் உயிரும், உடைமையும் அழிக்கப்பட்டது. அதாவது அந்தக் காலத்து இந்திப் படத்தில் நடக்கும் காட்சிகள் போல் அப்பகுதியில் சூரையாட்டம் நடந்தது. பேருக்கு இரண்டு தரப்பிலும் சிலர் கைது செய்யப்பட்டு பின்பு விடுவிக்கப்பட்டனர்.

ஆகவே, பொதுமக்கள் மத்தியில் எந்தத் தாக்கமும் ஏற்படவில்லை. அதுபோல், எதிர் வரிசையில் அமர்ந்த கருணாநிதியும் வாய் திறக்கவில்லை. காரணம் வாக்கு வங்கி அரசியல். உடனே திராவிடக் கட்சிகள்தான் காரணம் என்று எண்ணிவிடாதீர்கள். பொதுவுடமைவாதிகள் கூட வாய் திறக்கவில்லை. எந்தக் கட்சியும் வாய் திறக்கவில்லை.

சாதியக் கட்சிகள்தான் ஓலமிட்டன. காரணம் தசை வலியுள்ள ஆதிக்க சாதிகளிடம்தான் வாக்குகள் அதிகம். இன்று நெல்லை மாவட்டத்தில் தொடர் சாதிக் கொலைகள் நடக்கும் பொழுதும், எந்தக் தொலைக்காட்சி ஊடகங்களும் அந்தச் செய்தியை வெளியிடவே இல்லை. அதற்குப் பதிலாக காந்தியைப் பற்றி கட்ஜூ கூறியதைப் பற்றியும், கருத்து சுதந்திரம் பற்றியும், வாய் கிழிந்து கொண்டிருக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x