Published : 17 Mar 2015 12:24 PM
Last Updated : 17 Mar 2015 12:24 PM

ஆதார் அட்டையும் ஆதங்கமும்: தன்சு மனோ

செய்தி:>ஆதார் கட்டாயம் அல்ல: உச்ச நீதிமன்றம் மீண்டும் திட்டவட்டம்

'தி இந்து' ஆன்லைன் வாசகர் தன்சு மனோ கருத்து:

ஆதார் அட்டை எந்த நன்மைக்காக எடுக்கப்படுகிறது என்பதை மக்களுக்கு அரசு தெளிவுப்படுத்த வேண்டும்.

நான் ஒரு நாள் நகராட்சியின் வாசலில் கண்ட காட்சிகளின் சங்கடங்களை இங்கே பகிர்கின்றேன்.

பள்ளிக் குழந்தைகள் பள்ளிக்கூடத்தை விடுத்து, கூட்டி வரும் பெற்றோர்கள் அவர்களை கூட்டத்தில் புழுங்க வைப்பது, வயதானவர்களும், பார்வை குறைபாடு கொண்டவர்களும் பிடிக்க முடியாத அளவுக்கு சங்கடம், ஆபரேஷன் முடித்தவர்கள் இருக்கை வசதிகள் இல்லாமல் தவிக்கின்றனர்.

ஆதரவற்ற பாட்டி ஒருவர் ஆதார் எண் இல்லாமல் உதவித் தொகை பெற முடியவில்லை என்று அழுகையுடன் சொன்ன விஷயம் என் மனதை விட்டு அகலவில்லை.

அப்புறம் இன்னுமும் சிலருக்கு வாக்காளர் அட்டை இல்லை, குடும்ப அட்டை இல்லை என்ற பிரச்சினை இருந்துகொண்டே இருக்கின்றது.

ஆதார் அட்டை எடுப்பதற்கு இது எல்லாம் அவசியம் என்று அலைக்கழிக்கப்படுகின்றனர்.

இந்த இந்தியாவில் மட்டும் ஓர் இந்திய குடிமகனுக்கு எத்தனை வகையான ஆதாரங்கள். பணமும் இடமும் இருந்தால்தான் இந்தியன் இந்தியாவில் மதிக்கப்படுகிறான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x