குஜராத்துக்கு மட்டும் நீங்கள் பிரதமர் அல்ல!

குஜராத்துக்கு மட்டும் நீங்கள் பிரதமர் அல்ல!
Updated on
1 min read

குஜராத்தைத் தொழில்துறையில் முதலிடமாக்கும் பிரதமர் மோடியின் முயற்சிக்கு நன்றி! அதேசமயம், குஜராத்தைத் தாண்டி இந்தியா முழுமைக்கும் அவர் பிரதமர் என்பதையும் மனதில்கொள்ள வேண்டுகிறேன். காரணம், தமிழ்நாடு, பிஹார் போன்ற மக்கள்தொகை அதிகம் கொண்ட மாநிலங்களில் தொழில்வளர்ச்சி பின்தங்கியுள்ளதுடன் இளைஞர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகியுள்ளது. தமிழகத்தில் தொழில் தொடங்கிய நோக்கியா நிறுவனம், பல ஆயிரம் கோடி ரூபாய் சம்பாதித்துவிட்டு, பின்னர் திடீரென மூடிவிட்டு ஓடியது, மத்தியில் ஆட்சியிலுள்ள உங்களுக்குத் தெரியவில்லையா? நேரடியாகப் பல ஆயிரம் பேர் வேலை இழந்து செய்வதறியாது தவிப்பதும், மறைமுகமாகப் பல ஆயிரம் பேர் வேலை இழந்து தவிப்பதும் மோடிக்குத் தெரியவில்லையா? ஒரு கண்ணில் வெண்ணெய்; ஒருகண்ணில் சுண்ணாம்பா? குஜராத்துக்குத் தாங்கள் தனிக் கவனம் செலுத்துவதில் தவறில்லை. அதேபோல், உங்களுக்கு வாக்களித்த எங்களையும் சற்றே கவனியுங்கள். புதிதாக கோடிகளில் முதலீடு செய்யவில்லை என்றாலும் தவறில்லை, இருக்கும் தொழில் நசுங்காமலும், பாதியில் மூடிவிட்டு ஓடாமல் இருக்கவும் தகுந்த நடவடிக்கை எடுத்து உதவுங்கள் மோடி! அப்பர்சுந்தரம், சமூக ஆர்வலர், மயிலாடுதுறை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in