Published : 15 Dec 2014 05:41 PM
Last Updated : 15 Dec 2014 05:41 PM

தமிழ் வாசகர்களின் தரத்தை உயர்த்திய தி இந்து- மயில்சாமி அண்ணாதுரை

'தி இந்து' தமிழ் நாளிதழின் ஓராண்டு நிறைவு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் வாசகர் திருவிழா நடந்து வருகிறது. கோவையில் தொடங்கிய வாசகர் திருவிழா, புதுச்சேரி, திருச்சி, தஞ்சாவூர், திருநெல்வேலி, திண்டுக்கல், தூத்துக்குடி, மதுரை, திருப்பூர், சேலம், வேலூர், ஈரோடு ஆகிய 12 இடங்களில் நடந்து முடிந்துள்ளது. 13-வது வாசகர் திருவிழா, சென்னை எத்திராஜ் மகளிர் கலைக் கல்லூரி வளாக அரங்கில் நேற்று சிறப்பாக நடந்தது.

விழாவில், சென்னை உயர் நீதி மன்ற ஓய்வுபெற்ற நீதிபதியும், சட்டம் தொடர்பான நூல்களின் எழுத்தாளருமான கே.சந்துரு, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய (இஸ்ரோ) விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், பிரபல இலக்கிய எழுத்தாளர் சாரு நிவேதிதா, திரைப்பட நடிகர் கார்த்தி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று உரையாற்றினர். ஏராளமான வாசகர்கள், விழாவில் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.



இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன (இஸ்ரோ) விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேசியதாவது:

இயல் தமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் ஆகியவற்றை தொடர்ந்து 4-வது தமிழாக அறிவியல் தமிழை வளர்க்க வேண்டும்.

'தி இந்து' தமிழ் நாளிதழின் தலைப்புக்கு கீழே இடம்பெற்றிருக்கும் 'தமிழால் இணைவோம்' என்ற வார்த்தை எனக்கு மிகவும் பிடிக்கும்.

பாரம்பரியமிக்க 'தி இந்து' குழுமத்தில் இருந்து தமிழில் நாளிதழ் ஆரம்பிக்கப் போகிறார்களே, ஆங்கில நாளிதழ் செய்திகளை அப்படியே தமிழ்ப்படுத்துவார்களோ என்றெல்லாம் யோசித்தது உண்டு. அப்படியில்லாமல், தனித்துவமாக 'தி இந்து' தமிழ் நாளிதழ் வருகிறது.

பத்திரிகைகள் நேற்று நடந்த நிகழ்வுகளை மட்டுமல்லால் வரப்போகிற நிகழ்வுகளை ஆரூடமாகவோ, ஜோதிட மாகவோ இல்லாமல் அறிவுப் பூர்வமாக, சிந்திக்கும்விதமாக செய்திகளை வெளியிட வேண்டும். அந்தப் பணியை தமிழ் இந்து சிறப்பாக செய்து வருகிறது.

செய்தித்தாள்கள் வெறும் செய்தி களுடன் புதுமைகளையும் தொட வேண்டி யுள்ளது. அந்த வகையில் 'தி இந்து' தமிழ் நாளிதழில் புதுமையான செய்திகள், இசை, இலக்கியம், வணிகம், விஞ்ஞானம், சமையல் என அனைத்து அம்சங்களும் இடம்பெறுகின்றன.

தமிழ் இந்து நாளிதழ் வருகையால் வாசகர்களின் தரம் உயர்ந்திருக்கிறது. வாசகர்களின் தரத்தை மேம்படுத்தி, அவர்களை அடுத்தகட்டத்துக்கு தயார் படுத்தும் பணியை 'தி இந்து' சிறப்பாகச் செய்துவருகிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக, வாசகர்கள் எதை விரும்புவார்கள் என்பதைவிட, எந்த மாதிரியாக செய்திகளை கொடுத்து அவர்களின் தரத்தை மேலே கொண்டுவருவது என்று ஆராய்ந்து செய்திகளைத் தருகிறது.

நிலவுக்கு சந்திரயான் விண்கலத் தையும், செவ்வாய்கிரகத்துக்கு மங்கள் யானையும் வெற்றிகரமாக செலுத்தினோம். அமெரிக்கா உட்பட உலகின் முன்னணி நாடுகள்கூட முதல்முயற்சியில் வெற்றி பெறாத நிலையில், இந்தியா தனது முதல் முயற்சியிலேயே செவ்வாய்கிரகத்துக்கு வெற்றிகரமாக விண்கலத்தை செலுத்தி சாதனை படைத்தது.

இந்த சாதனைகள் எல்லாம் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி. இந்த சாதனைகளை வெளிச்சத்துக்கு கொண்டு வருபவை ஊடகங்கள்தான். நல்ல விஷயங்களை வெளியே கொண்டு வாருங்கள். எதிர்மறையான விஷயங் களை வெளியிட்டால் அதுபோன்ற விளைவுகளே உண்டாகும்.

எனவே நல்ல விஷயங்களை, சாதனை களை, விஞ்ஞான கண்டுபிடிப்புகளை, நல்ல இலக்கிய படைப்புகளை, நீதிபோதனைகளை சமூகத்துக்கு அடையாளம் காட்டுங்கள். அவற்றை பெரிய செய்திகளாக வெளியிடுங்கள். அந்தச் செய்திகளைப் படிப்பவர்களுக்கு தாங்களும் அவ்வாறு சாதனை நிகழ்த்த வேண்டும் என்ற விதை மனதில் விழும். அவர்களும் சாதனை படைப்பார்கள்.

இலக்கியமும், அறிவியலும் இணைய வேண்டும். அதன்மூலம் மனிதநேயம் மலர வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x