வெற்றி நூலகம் - 23/12/2014

வெற்றி நூலகம் - 23/12/2014
Updated on
1 min read

தன்னம்பிக்கையின் வழிகாட்டி

மாணவர்கள் தங்களின் வாழ்க்கையில் முன்னேற என்ன செய்ய வேண்டும் என்ற நோக்கோடு கற்பித்தலில் நீண்டகால அனுபவம் உள்ள ஆசிரியரால் எழுதப்பட்டுள்ளது இந்தப் புத்தகம். படிப்பிலும், தகுதித்தேர்வுகளிலும் வெற்றிபெறுவதற்கான தன்னம்பிக்கையான வழிமுறைகளைச் சிறப்பாக நூலாசிரியர் இதில் எழுதியுள்ளார்.

மாணவர்களின் வெற்றிக்கு வழிகாட்டி
பொன். பாக்கியநாதன்
வெளியீடு: பொன். ஆரோக்கிய செல்வம் பதிப்பகம்
திண்டிவனம்-604001


தமிழ்த் தேர்வுகளின் துணைவன்

சங்க இலக்கியம் தொடங்கி, தற்காலத் தமிழ் வளர்ச்சி, இலக்கணம் பற்றிய பல்வேறு அரிய செய்திகள் இந்தப் புத்தகத்தில் வினா- விடைகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன. தமிழில் நடத்தப்படுகிற போட்டித்தேர்வுகளுக்குப் பயன்படக்கூடிய வினா - விடைகளாக இவை அமைந்துள்ளன. தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரியின் தமிழாய்வுத் துறை பேராசிரியர் இதை உருவாக்கி உள்ளார்.

தமிழறிவு
(போட்டித் தேர்வுகளுக்குரிய இலக்கிய வினா-விடைகள்)
பேராசிரியர் டாக்டர் இராஜாவரதராஜா
மீனாட்சி புத்தக நிலையம்
மதுரை-625 001
0442345971

எக்ஸல் இனி உங்கள் வசம்

சாப்ட்வேர் தொழில்நுட்பத் துறையில் 20 வருட அனுபவம் கொண்ட பயிற்சியாளரால் உருவாக்கப்பட்ட நூல். 70க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப நூல்களை எழுதியுள்ளவரின் புத்தகம். மைக்ரோசாப்ட் எக்ஸல் எனும் சாப்ட்வேரைத் தானே கற்றுக்கொள்ள முயல்பவருக்கு எளிமையாக படங்களுடன் இந்த நூல் உருவாக்கப்பட்டுள்ளது.

மைக்ரோசாப்ட் எக்ஸல்-2013
காம்கேர் கே. புவனேஸ்வரி
வெளியீடு: விகடன் பிரசுரம்
சென்னை – 600 002
044-42634284

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in